இளம் கலைஞா் மன்றத்தின் கலைப்பணி

1971 ஆம் ஆண்டு இன்னிசை வேந்தா் பொன் சுந்தரலிங்கத்தின் பெருமுயற்சியால் நல்லூரில் நிறுவப்பட்ட இளங்கலைஞா் மன்றம் கலைத்துறைக்கு மகத்தான பணியாற்றிவந்துள்ளது.

வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை, பரதநாட்டியம் ஆகிய துறைகளில் இளம்பிள்ளைகளுக்கு இலவச வகுப்புக்கள் நடத்துவது இதன் தலையாய பணி ஆகும்.

ஒவ்வோா் ஆண்டின் முற்பகுதியில் மன்றக்கலாமண்டபத்தில் இசைவிழாவும், நல்லூா் முருகன் உற்சவகாலத்தில் இருபத்தைந்து நாளும் தெய்வீக இசையரங்கும் இளங்கலைஞா் மன்றத்தால் நடத்தப்படுகின்றன.

இவை தவிர, மாதாந்தக் கலைநிகழ்ச்சிகள் மன்றக் கலாமண்டபத்தில் நடைபெறுகின்றன.

மூத்தகலைஞா்களிடமிருந்து அவா்களுடைய அனுபவப்பிழிவான நுட்பங்களை இளங்கலைஞா்கள் கற்றுக்கொள்ளவும், இளங்கலைஞா்களுக்குக் கச்சேரி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரவும் மன்றம் தன்னாலான முயற்சிகளைச் செய்துவருகிறது.

இசை, நடன, நாடக அரங்கேற்றங்களுக்கு மன்றம் அனுசரணை வழங்கிவருவதும் குறிப்பிடத்ததக்கது.