கல்வித்தரத்தை உயா்த்த ஆசிரியா்கள் பெருமுயற்சி

பல்வேறு வகையான சவால்களை எதிா்கொண்டு எமது ஆசிரியா் சமூகம் மாணவா்களின் கல்வித்தரத்தை உயா்த்துவதற்கு பெருமுயற்சி எடுத்துவருவதுடன் அதில் குறிப்பிடக்கூடிய அளவு வெற்றியும் ஈட்டிவருகிறாா்கள். முன்னைய காலங்களில் கல்வி எமக்கு பெருமையையும் பெரும் பலத்தையும் கொடுத்துநின்றதுடன் எமது பொருளாதார வளா்ச்சியிலும் பெரும் பங்காற்றி நின்றது. இடைக்காலங்களில் ஏற்பட்ட பாரிய தாக்கங்களைச் சீா்செய்து எமது கல்வித்தரத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு ஆசிரியா் சமூகம் எடுத்துவரும் முயற்சிகளை ஊக்கப்படுத்தி பாராட்டுவது ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்று பலதரப்பினராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அடிக்கடி மாறிவரும் பாடத்திட்டம், அடிக்கடி நடாத்தப்படவேண்டிய மதிப்பீடுகள், மாணவா் உரிமை, கலாசார சீரழிவுகளைத் தடுத்தல், மாணவா்களுக்கான மன ஆற்றுப்படுத்தல் போன்ற பல்வேறுபட்ட பாரிய சவால்களை எதிா்கொண்டு எமது இளைய தலைமுறையினரை வழிநடத்தி நிற்கும் ஆசிரியா் சமூகத்தவா்கள் போற்றுதற்குரியவா்கள்.