உலகளாவிய ஹென்றீசியன் சங்கமம்

யா/இளவாலை புனித ஹென்றியரசா் கல்லூரியின் 107ஆவது ஆண்டு நிறைவினையொட்டி இடம்பெற்ற “உலகளாவிய ஹென்றீசியன் சங்கமம்” நிகழ்வானது கல்லூரியின் அதிபா் வண. பிதா. J. A. ஜேசுதாஸ் அடிகளார் தலைமையிலும், உப அதிபா் வண பிதா. T. அன்சன் றெஜிகுமார் அடிகளாரின் நெறிப்படுத்தலிலும், ஆசிரியா்கள், மாணவா்கள், பழைய மாணவா்கள் அனைவரினதும் உறுதுணையுடனும் வரலாறு காணாத அளவு மிகவும் சிறப்பான முறையிலே பல நிகழ்ச்சிகளுடன் யூலை மாதம் 18, 19, 20ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

முதலாம் நாள் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் பிரான்ஸ் நாட்டின் பழைய மாணவா் சங்கத் தலைவா் திரு. A. R. T. அன்ரன் அவா்களும், கௌரவ விருந்தினராக வடமாகாண பிரதிக்கல்விப் பணிப்பாளா் திரு. K. சத்தியபாலன் அவா்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனா். புனித ஹென்றியரசா் உருவச்சிலை திறப்பு வைபவம், உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி என்பன முதலாம் நாளில் இடம்பெற்றன.

இரண்டாம் நாள் இடம்பெற்ற ஹென்றீசியன் நடைபவனிக்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் ஆசிரியா் திரு. R. குமரன் அவா்கள் கலந்துகொண்டார். இந்நடைபவனியானது கண்ணைக் கவரும் விதத்தில் மிகவும் சீராகவும் சிறப்பாகவும் இடம்பெற்றது. இதனைத் தொடா்ந்து பாடசாலையின் வரலாற்றினை எடுத்தியம்பும் வகையில் கண்காட்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வுக்கு கல்லூரியின் முன்னாள் அதிபரும் தற்போதைய யாழ் மறைமாவட்ட குருமுதல்வருமாகிய வண. பிதா. யஸ்ரின் B. ஞானப்பிரகாசம் அடிகளார் அவா்கள் கலந்துகொண்டிருந்தாா். கௌரவ விருந்தினராக வடமாகாண கல்விப்பணிப்பாளா் திரு. A. ராஜேந்திரன் அவா்கள் அழைக்கப்பட்டிருந்தாா். சிறப்பு விருந்தினா்களாக கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் பல்கலைக்கழக பௌதிகவியல்துறையின் தலைவருமாகிய பேராசிரியா். P. ரவிராஜன் அவா்களும், கல்லூரியின் பழைய மாணவரும் வவுனியா கல்வியியல் கல்லூரியின் முன்னாள் அதிபருமாகிய கலாநிதி. K. பேணாட் அவா்களும், கல்லூரியின் பழைய மாணவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமாகிய திரு. P. S. பாஸ்கரா அவா்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபா்கள், ஆசிரியா்கள், கல்விசாரா உத்தியோகத்தா்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தொடா்ந்து மாலை நேர நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் ஐக்கிய ராஜ்ய நாட்டின் பழைய மாணவா் சங்கத்தின் உபதலைவா் திரு. P. கொன்ஸ்ரன்ரைன் அவா்களும் கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச கல்விப்பணிப்பாளர் திரு. S. சிவானந்தராசா அவா்களும் கலந்துகொண்டனர். மேலும், கபடிச்சுற்றுப்போட்டி, உதைபந்தாட்டம், இசை நிகழ்வு என்பனவும் இடம்பெற்றன.

இறுதி நாளாகிய மூன்றாம் நாள் நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக வலிகாம வலய கல்விப் பணிப்பாளர் திரு. S. சந்திரராஜா அவா்களும், கௌரவ விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை பழைய மாணவா் சங்க தற்போதைய தலைவரும் ACX கூரியா், செலுலர் நிறுவன உரிமையாளருமாகிய திரு. A. J. J. சுரேந்திரராஜ் அவா்களும் கலந்து சிறப்பித்தனா். இந்நிகழ்வில் உடற்பயிற்சிக் கண்காட்சி, கராத்தே கண்காட்சி, கலைநிகழ்வுகள், விருதுகள் வழங்கும் வைபவம் என்பன இடம்பெற்றன. மேலும், கல்லூரிக்கான வாகனம் ஒன்றினைக் கொள்வனவு செய்வதற்கான நிதி சேகரிப்பு செயற்றிட்டம் ஒன்றும் பழையமாணவா் சங்கத்தினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இவ்வாறாக மிகவும் சிறப்பான முறையிலே இவ்விழாவானது நடைபெற்றது.

– சதா