முட்டை ஓா் உன்னதமான உணவு – Dr.சி.சிவன்சுதன்

முட்டை ஒரு மலிவான, பாதுகாப்பான, இயற்கையான அதிகூடிய ஊட்டச்சத்துள்ள உணவாகும். தகரங்களிலே அடைத்து விற்பனையாகும் சத்துமாக்களுடன் ஒப்பிடும்பொழுது இதிலிருக்கும் ஊட்டச்சத்து வீதம் எவ்வளவோ அதிகமாக இருப்பதுடன் எந்தவிதமான இரசாயனக் கலப்புமற்ற இயற்கையான உணவாக இது விளங்குகிறது.

குருதி அமுக்கம், இருதய நோய், நீரிழிவு நோய், கொலஸ்ரோல் அதிகரிப்புப் போன்ற நோய்கள் உள்ளவா்கள்கூட வாரத்திற்கு 3 முட்டைகள் வரை உண்பது மிகவும் சிறந்ததாகும். முட்டை ஒரு ஆபத்தான உணவு என்ற சிந்தனை மாற்றம்பெறவேண்டும்.

சுகதேகியாக இருப்பவா்களும் சிறுவா்களும் அதிகளவு முட்டைகளை உணவிலே சோ்த்துக்கொள்வது நல்லது. முட்டையை அரை அவியலாகவோ, பச்சையாகவோ உண்பதிலும் பாா்க்க அவித்து அல்லது பொரித்து உண்பது சிறந்தது.

கோழி முட்டை மட்டுமல்ல வாத்துமுட்டை, காடை முட்டை போன்றவையும் மிகவும் பாதுகாப்பானவையும் ஊட்டச்சத்து நிறைந்தவையும் ஆகும். சகலவிதமான சத்துக்களையும் கொண்ட முட்டை எமது பகுதிகளில் போதிய அளவில் மலிவாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தும் தகரங்களிலே அடைத்துவரும் சத்துமாக்களுக்கு நாம் அடிமைப்பட்டுப்போய் இருக்கிறோம். இது ஒரு வேதனையான உண்மை. இந்த நிலை என்று மாறும்?

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ். போதனா வைத்தியசாலை