மழைநீரைக் குடிநீராகப் பாவிப்பதால் ஏற்படும் நன்மைகள் – Dr.சி.சிவன்சுதன்

  • தொற்றுநோய்களான வாந்திபேதி, வயிற்றுளைவு, நெருப்புக் காய்ச்சல் போன்றவற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
  • பல சிறுநீரக நோய்களான சிறுநீரகப்பழுது, சிறுநீரகக்கற்கள் தோன்றுதல், சிறுநீர் அடைப்பு போன்றவற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
  • புற்றுநோய் தோன்றும் வீதத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ளலாம்.
  • தீய இரசாயனப் பதார்த்தங்கள் உடலில் சேர்ந்து உடல் நோய்வாய்ப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
  • நீரிலுள்ள மேலதிக கல்சியம் இரத்தக் குழாய்களில் படிவதால் மாரடைப்பு, பாரிசவாதம் என்பன ஏற்படும் வீதம் அதிகமாகும். நீரைக் கொதிக்கவைப்பதன் மூலம் அதிலுள்ள கல்சியத்தைப் பூரணமாக அகற்ற முடியாது. மழைநீரில் கல்சியம் இல்லை. எனவே, மழைநீரைப் பாவிப்பதன் மூலம் மேலதிக கல்சியத்தை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து தப்பிக்கொள்ளலாம்.
  • நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.
  • நன்னீர் உப்பாவதைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
  • தூய நீரை அருந்துகின்றோம் என்ற மனநிறைவு ஏற்படும்.

எனவே வரவிருக்கும் மழைக்காலத்தில் மழைநீரைச் சேகரிப்பதற்கு எம்மைத் தயார்படுத்திக்கொள்வோம்.

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ். போதனா வைத்தியசாலை