இசை கற்கும் திறனை மேம்படுத்தும்

இசையானது ஆரோக்கியமான மனித வாழ்விற்கு பல வழிகளிலும் உதவுகின்றது என்பதை பல ஆராய்ச்சிகள் உறுதிசெய்துள்ளன.

மன அழுத்தத்தையும், மனப்பதட்டத்தையும் குறைப்பதற்கு இசை உறுதுணையாக இருப்பதுடன் பல நோய்களின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கும் இசை பயன்படுகின்றது என பல ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். அண்மையில் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவின்படி இசைப்பயிற்சி இளையவர்களிடம் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவயது குழந்தைகளின் மொழித்திறன் மற்றும் படிக்கும் ஆற்றலை இசைப்பயிற்சி மேம்படுத்துவதாக இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.