பறக்கும் பாறையில் விண்கலம் தரையிறங்கியது

”வால் நட்சத்திரம் 67 பி” என்ற பெயரிடப்பட்டுள்ள பறக்கும் பாறையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம் 10 வருட பயணத்தின் பின்னர் நவம்பர் 12 ஆம் திகதி தரையிறங்கியது. விண்கலம் தரையிறங்கிய வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் கரிமச் சேதன மூலகங்கள் இருப்பதாக அந்த விண்கலம் கண்டறிந்துள்ளது. காபனைக் கொண்டுள்ள இந்த கரிமச் சேதனங்கள்தான் பூமியில் உயிர்கள் தோன்றியதற்கான அடிப்படையாகும்.
ஒரு சுத்தியலை பிரயோகிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ”முபுஸ்” என்னும் கருவியின் ஆரம்ப கட்ட தகவல்களின்படி, அங்கு 10 முதல் 25 செண்டிமீட்டர் கனதியான தூசிப்படலமும் அதற்கு கீழே நீரினால் ஆன பனிக்கட்டியும் இறுக்கமாக படர்ந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.