மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி? – பகுதி 4

எமது சிறிய மனித வலுவையும் குறைந்த நேரத்தையும் செலவிடுவதன் மூலம் நாம் எவ்வாறு இந்த மழை நீரை சுத்தமாகச் சேகரிக்கும் முறையை தெளிவாக மக்களுக்கு விளக்கவே இந்த கட்டுரையானது உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. மழைநீரைத் தொற்றாக்கக்கூடிய காரணிகளையும் அவற்றை எவ்வாறு குறக்கலாம் என்பதையும் இங்கே கீழே தரப்பட்டுள்ள சிறிய அட்டவணையைப் பயன்படுத்திப் பார்க்கலாம்

Document2-page-001

குடாநாட்டைப் பொறுத்தவரை நாம் பயன்படுத்தும் கூரை மேற்பரப்பானது பொதுவாக மண் ஓடுகள், Asbestos சீமெந்து கூரைகளாகவே உள்ளன. சீமெந்துக் கூரைகள் மண் ஓடுகள் பற்றிய ஐயப்பாடுகள் ஏதுவும் இராது. ஆயினும் Asbestos கூரைகள் பயன்படுத்தப்படும் போது அதிலிருந்து வெளிவரும் கழிவுகள் புற்றுநோயைக் தூண்டக் கூடியதாக இருக்குமோ என்ற ஐயப்பாடு இருக்கின்றபோதும் இது பல ஆய்வுகளின் மூலம் மிகமிகக் குறைவாகவே உள்ளது என்பது (campbel/1993) தெளிவுபடுத்துகின்றது.

மக்களுக்கு தமது கூரை மேற்பரப்பை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று தெளிவாக வைத்திருக்கவேண்டும் என்று தெளிவாக விளக்கவேண்டிய தேவை இராது. மிகச் சாதாரணமாக கூரையைக் கூட்டுவதன் மூலமும் கூரையின் மேல் தொங்கிக் காணப்படும் மரக்கிளைகளை அகற்றுவதன் மூலமும் சுத்தமாகப் பராமரிக்க முடியும். மழை அறிகுறி காணப்படும் சந்தர்ப்பத்தில் இந்த சுத்திகரிப்பு மிக அவசியமாகும்.

கூரை மேற்பரப்பில் பெறப்படும் மழையை ஒரு சேரப் பெறுவதற்கு நாம் கூரை விளிம்பைச் சுற்றி பீலிகள் (Gutter) அமைத்து அதன் மூலமே நீர் சேகரிக்கும் தொட்டிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். குடாநாட்டைப் பொறுத்தவரை தற்போமு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பீலிகள் PVC இனால் அமைக்கப்படுவதால் அதில் இருந்து எந்தவிதமான ஆபத்தான மாசுக்களும் வர வாய்ப்புக்கள் இல்லை. ஆயினும் இந்த பீலிகளும் முறையாகக் கூட்டி சுத்தம் செய்யப்படல் வேண்டும். நீரானது அடைப்பின்றி ஓடக்கூடிய வகையில் பராமரிக்கப் படவும் வேண்டும்.

தொடரும் ….

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

முன்னைய பகுதி