மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி? – பகுதி 6

முதல் கருவி (first Flush)

4

படத்தில் காட்டப்பட்டது போல் நீரை நீர்த்தாங்கிக்கு கொண்டு செல்லும் குழாயில் நீர்த்தாங்கியில் காணப்படும் வடிகட்டிக்கு முன்பாக செங்குத்தாக ஒரு நீர் வெளியேற்றுக் குழாயையும் அதனுடன் ஒரு வால்வு (Valve) அமைப்பையும் இணைத்தல். முதல் மழை பெய்யும் நேரங்களில் முதல்மழை பெய்யும் நேரங்களில் வால்வு திறந்த நிலையில் வைத்திருப்பதன் மூலம் முதல்கருவி வரும் (first Flush) நீரானது நீர்த்தாங்கியை அடையாமற் மிகப் பாதுகாப்பாக வெளியேற்றமுடியும்.

நீர்த்தாங்கியானது குடும்பங்களில் வருமான நிலையையும் அவர்களின் குடிநீர்த் தேவையிலும் பெரிதாகத் தங்கியிருக்கும். நீர்த்தாங்கிகள் அமைக்கும் செலவினமானது மிக முக்கிய பங்கு வகிக்கின்றபோதும் அமைக்கும் நீர்தாங்கியானது ஓரளவேனும் நீர்த்தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

அண்ணளவாக ஒரு நாளைக்கு ஒரு மனிதன் குடிநீர்த் தேவை 2.5 லீற்றர் (Sphere standard 2004) ஆகும். நாம் இதனை அண்ணலவாக 3 லீற்றர் எனக்கொண்டு நீர்த்தாங்கியின் கொள்ளளவைக் கணக்கிட்டோம் ஆயின.

ஒரு மனிதனின் நீர்த்தேவை = 3லீற்றர்
குடும்ப அங்கத்தவர் = 4 பேர்
ஓர் ஆண்டுக்கான நீர்த்தேவை அண்ணளவாக = 3L x 4பேர் x 365 நாள்கள்
ஆகவே 4 பேர் கொண்ட குடும்பம் ஆனது = 4380லீற்றர்.
ஆகவே அண்ணளவாக 5000l (5m3)

ஏனெனில் இந்த நீரானது நீண்டகால சேமிப்பில் இருக்கபோவதால் அதனால் ஏற்படும் நீர் இழப்பையும் (ஆவியாதல், வீணாக்கப்படல்) கருத்தில் கொள்ள வேண்டும்.

தூய்மைப்படுத்தப்பட்டு சேகரிக்கப்படும் மழைநீரைப் பாதுகாத்து எமது நீண்ட கால தேவைகளுககுப் பயன்படுத்துவதற்கு எமக்கு ஒரு அரிய பாத்திரம் அல்லது ஒரு கட்டமைப்புத் தேவைப்படுகிறது. அத்துடன் மிகக் குறுகிய காலம் பெய்யும் இந்த மழையை அந்த வருடம் முழுவதும் பயன்படுத்த ஒர் குறிப்பிடத்தக்களவு பெரிய தாங்கியும் அவசியம். இந்த தாங்கியும் சேகரிக்கப்படும் நீரை மாசடையச் செய்யாமல் தடுக்க வல்லதாகவும் இருத்தல் வேண்டும்.

3

நாம் எம் குடும்பத் தேவைகளுக்குத் தேவையான நீரின் அளவைக் கணக்கிட்டுக் கொள்வதன் மூலம் எமக்குத் தேவையான நீர்த்தாங்கியின் கொள்ளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம். இந்த நீர்த்தாங்கியைத் தெரிவு செய்யும் போது பலகாரணிகளைக் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அதில் முக்கியமாகக் குடும்பத்தின் பொருளாதார நிலை, வீட்டின் இடவசதி, சேகரிக்க வேண்டிய நீரின் கொள்ளவு நீர்த்தாங்கிகள் அமைக்கும் தொழில்நுட்பத்தில் கிடைக்கக் கூடிய தன்மை என்பனவாகும்.

நாம் சுத்தமான குடிநீரை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளமையால் இந்தக் காரணிகளுக்கு இடம் கொடுக்காது நீரைச் சேமிப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே ஏதோ ஒரு வகையில் நாம் இந்த நீரைச் சேகரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்

தொடரும் ….

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

முன்னைய பகுதி