மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி? – கேள்வி பதில்

யாழ்ப்பாணத்தில் மழை 2, 3 மாதங்களுக்கு கூட பொழிவதில்லை அப்படியானால் பெய்த மழை நீரை 2, 3 மாதங்களுக்குச் சேமிக்கும் போது
கேள்வி – தற்போது கிடைக்கும் Plastic Tank குகளில் சேகரித்து வைக்கலாமா?

பதில் – ஆம், சேகரிக்கும் நீர் தாங்கியானது நிழலான பகுதிகளில் வைத்துப் பாதுகாக்கப்படல் வேண்டும்.

கேள்வி – சேகரிக்கப்பட் நீர் 2,3 மாதங்களுக்கு தாங்கியில் பழுதடையாமல் இருக்குமா??
பதில் – ஆம் மழைநீரானது மிகக் குறைந்தளவான சேதன, அசேதனப் பதார்த்தங்களைக் கொண்டிருப்பதனால் பழுதடைவதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவு

கேள்வி – இருக்கமாயின் நீரை பாதுகாக்க எவ்வழிகளைக் கையாள வேண்டும்?
பதில் – நாம் முன்னர் கூறிய வழிமுறைகளைப் பயன்படுத்தி சாதாரண குளோரினேற்றல் மூலமே பாதுகாத்துக்கொள்ளலாம். மேலும் கொதிக்க வைத்து அருந்தலும் சிறந்த பாதுகாப்பு முறையாகும்.

கேள்வி – தாங்கியில் சேகரிக்கப்பட்ட மழைநீரை அருந்துவதானால் வடிகட்டிய பின் ( filter மூலம்) அருந்தலாமா? அல்லது கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்த வேண்டுமா?
பதில் – ஆம், எந்தகையான நீரையும் கொதிக்க வைத்து அருந்துதல் சிறந்தது.

கேள்வி – மழைபெய்யும் பொழுது ஒரு அகன்ற பாத்திரத்தை திறந்த இடத்தில் ஒரு தாங்கி மேல் வைத்து மழைநீரைச் சேகரிக்க உத்தேசித்துள்ளேன். இவ்வண்ணம் சேகரிக்கும் நீர் நேரடியாகக் குடிப்பதற்கு பாவிக்கலாமா? அல்லது ஏதும் சுத்திகரிப்பு தேவையா?
பதில் – பொதுவாக மழைநீரானது மிகவும் தூய்மையானதாகவே காணப்படும் எனினும் பறவைகளின் அசைவு, அவற்றின் எச்சங்கள் நீரில் கலப்பதை அறிந்து கொள்ளமுடியாது. ஆகவே சேமிக்கும் நீரை கொதித்து ஆற வைத்தபின் பாவிப்பது மிகச் சிறந்தது. அத்துடன் நீங்கள் கூறும் முறையால் சேமிக்கும் மழைநீரின் அளவு மிகக்குறைவானதே, தேவைக்கு போதுமானதாக அமையாதென்பதனாலேயே கூரை நீரை சேமித்து சுத்திகரித்துப் பயன்படுத்தும் முறையை நாம் தெளிவு படுத்தியிருந்தோம்.

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

மழைநீரை குடிநீர் ஆக்குவது எப்படி? – பகுதி – 1