250 கோடி ஆண்டுகள் பழமையான தண்ணீர் கண்டெடுப்பு

பூமிக்கடியில் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் 250 கோடி ஆண்டுகள் பழமையான தண்ணீர் காணப்படுகிறது. 11 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் என்ற அளவில் இந்த பழைய தண்ணீர் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தற்போது கணித்துள்ளனர். அதாவது உலகிலுள்ள அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்திலும் இருக்கின்ற நீரை விட புவியின் மேற்பரப்புக்கு மிக ஆழத்தில் இருக்கின்ற இந்த பழைய தண்ணீரின் அளவு அதிகம்.
நேச்சர் என்ற அறிவியல் சஞ்சிகையிலும் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வளவு ஆழமான இடங்களிலும், உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இந்த தண்ணீர் மிகவும் அதிகமான உப்புத்தன்மை கொண்டுள்ளது. பூமிக்கு அடியில் கிட்டத்தட்ட இரண்டரை கிலோமீட்டர்கள் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட தண்ணீர் 250 கோடி ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் காட்டியுள்ளன.