நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புது ரக ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு

நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புது ரக ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு

மண்ணில் இருந்து புது ரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மசெஷூசெட்ஸின் போஸ்டனில் இருக்கும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இறங்கி இந்த புதிய மருந்துகளை கண்டறிந்துள்ளனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பானது மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் அதிகமான புதுரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.

1950களிலும் 1960களிலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை எந்த புதிய ஆண்டிபயாடிக் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதன் விளைவாக கடந்த முப்பது ஆண்டுகளில் நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரிகள் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு தப்பி உயிர்வாழும் வகையில் தம்மை பெருமளவு தகவமைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டன. இந்த புதிய கண்டுபிடிப்பானது மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது.