குழந்தைப் பேற்றைப் பிற்போடுவது கூடாது.

குழந்தைப் பேற்றைப் பிற்போடுவது கூடாது.

 

45 வயதுக்கு மேற்பட்ட தந்தையருக்கு பிறக்கும் குழந்தைகள் மனநலப்பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ளும் ஆபத்து இருப்பதாகக் காட்டும் ஆதாரங்களை தாங்கள் கண்டறிந்திருப்பதாக ஸ்வீடன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

1993 இலிருந்து 2001ம் ஆண்டு வரை ஸ்வீடணில் பிறந்த 26 இலட்சம் குழந்தைகள் குறித்த தரவுகளில் பரிசீலித்த ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் 20 இலிருந்து 24 வயதான தந்தைகளுக்கு பிறக்கும் குழந்தைகளைக் காட்டிலும் முதிய தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்கிசம் (Autism) கவனக்குறைவு, பிவுண்ட மனோநிலை (Schiropherend) போன்ற பிரச்சினைகள் உருவாகும் சாத்தியக்கூறு அதிகம் காணப்பட்டதாக அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் முதிய தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகள் மனநோய்ப் பிரச்சினைகளை நிச்சயம் எதிர்கொள்ளும் ஆபத்து சிறிதாகவே இருப்பதாக அவர்கள் கூறினர்.