கேட்கும் திறணை இழந்தவருக்கு இசையுலகின் உயர் விருது

கேட்கும் திறணை இழந்தவருக்கு இசையுலகின் உயர் விருது
ஸ்கொட்லாந்தின் பிரபல தாள வாத்தியக் கலைஞரான டேம் எவ்லின் க்ளெனி மற்றும் அமெரிக்காவின் நாட்டுப்புற இசைக் கலைஞர் எமிலோ ஹாரிஸ் ஆகிய இரண்டு பெண்களுக்கு உலகளவில் இசைத்துறையில் நோபல் பரிசு என்று கருதப்படும் போலார் மியூசிக் விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
இதில் எவ்லின் க்ளெனி முழுமையாக இல்லாவிட்டாலும் பெருமளவுக்கு கேட்கும் திறணை இழந்தவர் என்பதும், அப்படிப்பட்ட ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவருடன் கூட்டாக இந்த ஆண்டுக்கான போலார் இசை விருதை வென்றுள்ள எமிலோ ஹரிஸ் கிராமி விருதுகளை 13 தடவைகள் பெற்றுள்ளார்.

எவ்லின் க்ளெனி தனது 12ஆவது வயதில் கேள்வித் திறனை இழந்திருந்தாலும் அவருக்கு பரந்துபட்ட அளவில் இசையின் புரிதல் உள்ளது என்றும், எமிலோ ஹாரிஸின் இசை பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்காவின் நிலப்பரப்பை பிரதிபலிக்கிறது என்றும் விருதுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்