எனக்கு வயது 60. சிறிது காலமாக எனக்கு முதுகுவலியும், முழங்கால் மூட்டு வலியுமாக உள்ளது. கல்சியம் மாத்திரைகள் அல்லது கல்சியம் உள்ள பால்மா வகைகள் எதாவது பாவிக்கலாமா?

எனக்கு வயது 60. சிறிது காலமாக எனக்கு முதுகுவலியும், முழங்கால் மூட்டு வலியுமாக உள்ளது. கல்சியம் மாத்திரைகள் அல்லது கல்சியம் உள்ள பால்மா வகைகள் எதாவது பாவிக்கலாமா?எனக்கு வயது 60. சிறிது காலமாக எனக்கு முதுகுவலியும், முழங்கால் மூட்டு வலியுமாக உள்ளது. கல்சியம் மாத்திரைகள் அல்லது கல்சியம் உள்ள பால்மா வகைகள் எதாவது பாவிக்கலாமா?
கல்சியமானது உடலுக்கு மிகவும் அதியாவசியமான கனியுப்பாகும். இது என்புகளின் உருவாக்கம். தசைச்சுருக்கம், நரம்பு கணத்தாக்கம், ஓமோன் சுரப்பு, நரம்பு, மூளை போன்றவற்றின் தொழிற்பாடுகளுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது.

யாழ்ப்பாணத்தை பொறுத்த மட்டில் நீரில் அதிகளவு கல்சியம் காணப்படுகின்றது. எனவே அன்றாடம் உள்ளெடுக்கும் நீரின்மூலமாகவும், உணவின் மூலமாகவும் உடலுக்குப் போதுமான கல்சியம் கிடைக்கின்றது.

பால், பால் உற்பத்திப் பொருள்களானயோக்கட், சீஸ், மீன், முட்டை, மரக்கறிவகை, தானியவகை, பழச்சாறு என்பவற்றிற் போதியளவு கல்சியம் காணப்படுகின்றது. எனவே கல்சியம் கூடிய அளவுகளில் உள்ள பால்மா வகைகளையும், மாத்திரைகளையும் பாவிக்கவேண்டிய அவசியம் பொதுவாக இல்லை.

நாளொன்றுக்கு உடலுக்குச் சராசரியாகத் தேவையான கல்சியத்தின் அளவு 1000 – 1300mg ஆகும். சாதாரணமாகக் குருதியில் உள்ள கல்சியத்தின் அளவு 8.5 – 10.2mg/dl ஆகும். கல்சியம் அதிகளவு உள்ள பால்மா வகைகளையோ அல்லது மாத்திரைகளையோ உள்ளெடுக்கும்போது கல்சியமானது இரத்தக்குழாய்கள், மென் இழையங்கள் போன்றவற்றிற் படிவடைகின்ற தன்மை அதிகரிக்கின்றது.

இருதயக் குருதிக் குழாய்களிற் படிவதன் மூலம் மாரடைப்புப் போன்ற ஆபத்தான நிலைகளும், சிறுநீரகங்களில் தொடர்ந்து படிவதன் மூலம் சிறுநீரகக் கற்கள் உருவாகின்ற நிலையும் ஏற்படுகின்றது.

கல்சியம் மாத்திரைகள் வேறு சில மருந்துகளுடன் இடைத்தாக்கத்தில் ஈடுபடுவதன் மூலம் அவற்றின் செயற்றிறனைப் பாதிக்கின்றது. அதுபோல் சிலவகை மருந்துகளின் அகத்துறுஞ்சலையும் பாதிக்கின்றது.

சில நோய்களைப் பொறுத்தமட்டில் ( உதாரணம் – Osteoporosis) மேலதிகக் கல்சியமானது தேவைப்படுகின்றது. எனவே கல்சியம் மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனையின்றிப் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்வது நன்று