உயிருடன் இருக்கும் நபர் கொலை செய்யப்பட்டுவிட்டார் எனக் கருதி விசாரணை

உயிருடன் இருக்கும் நபர் கொலை செய்யப்பட்டுவிட்டார் எனக் கருதி விசாரணை
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தில் வசிக்கும் ஜான் டிமிரியாசியெஃப் கொலை செய்யப்பட்டுவிட்டார் எனக் கருதி அவரது இல்லத்துக்கு காவல்துறையினர் சென்றபோது இருதரப்புக்கும் அதிர்ச்சி
மருத்துவமனையில் அகற்றப்பட்ட கால், முறையாக அழிக்கப்படாத நிலையில், கொலை நடந்ததாகத் தவறுதலாகக் கருதி, விசாரணையில் போலிசார் ஈடுபட, உயிருடன் இருக்கும் அந்தக் கால் அகற்றப்பட்ட நபரின் மனநிலை எப்படி இருக்கும் ?
புளோரிடாவின் கோரல் கேபிள்ஸ் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், டிமிரியாசியெஃப்பின் வலது காலை, அவரது கால் முட்டியிலிருந்து கீழே வெட்டியெடுத்திருந்தனர்.
ஆனால் துண்டிக்கப்பட்ட உடலுறுப்பை வழக்கமாக செய்வது போல் எரித்து சாம்பலாக்குவதற்கு பதிலாக, குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டனர்.
இந்த அகற்றப்பட்ட காலில் அவரது பெயர் எழுதப்பட்ட ஒரு லேபல் கட்டப்பட்டிருந்த நிலையில் , போலிசார் இது குறித்து விசாரணை ஒன்றைத் துவக்கினர்.
இப்போது தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக டிமிரியாசியெஃப் மருத்துவமனை மீது வழக்கு தொடுத்துள்ளார்.
மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இனி இவ்வாறான சம்பவங்கள் நிகழாதாவாறு உரிய வழிமுறைகள் இப்போது மீண்டும் பலப்படுத்தப்பட்டுள்ளன” தெரிவிக்கப்பட்டுள்ளது.