4 வயதுடைய எனது மகனுக்கு முட்டு வருத்தம்(ஆஸ்துமா) கடந்த 2 வருடங்களாக இருக்கின்றது. முட்டு வருத்தம் அதிகரித்து அடிக்கடி வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டியுள்ளது. வைத்தியசாலையில் நன்கு குணமாகி வீடு திரும்பியதும் ஓரிரு நாட்களில் மீண்டும் முட்டு வருத்தம் அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன?

வைத்தியசாலையில் குணமாகி வீட்டில் அதிகரிக்கிறது எனில் முட்டு வருத்தத்தைக் கூட்டும் காரணிகள் வீட்டிச் சூழலிலேயே காணப்படுகின்றது. நீங்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள்.

வீட்டில் தூசுகள் அகற்றப்பட்டு சுத்தமாக இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு நாளும் வீட்டை பெருக்கி தூசு காற்றில் எழும்பாமல் ஈரத்துணியால் நிலத்தை துடைக்க வேண்டும்.
கிழமைக்கு 2 தடவையேனும் படுக்கை விரிப்புஇ தலையனை என்பவற்றை கழுவுதல் வேண்டும்.
உங்கள் குழந்தைக்கு எந்தப் பொருட்கள் ஒவ்வாமையை (allergy) ஏற்படுத்துகின்றனவோ அவற்றைத் தவிர்த்தல் வேண்டும். உதாரணம்: பொம்மைகளின் பஞ்சு(wool) , மகரந்தமணிஇவாசனைத்திரவியங்கள், மண்ணெண்ணை மணம்
யன்னல்கள் திறந்த, நல்ல காற்றோட்டமான அறைகளில் குழந்தை தூங்க வேண்டும்.
ஒர் அறையினுள் பல அங்கத்தவர்கள் நெருக்கமாகப் படுப்பதை தவிர்த்தல் வேண்டும்.
நுளம்புத்திரி எரிப்பதை தவிர்த்துஇ சுத்தமான நுளம்பு வலைகளை பயன்படுத்துங்கள்.
கரப்பான் பூச்சிகள் பெருகாமல் தடுத்தல் வேண்டும்.
குடும்ப அங்கத்தவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை நிறுத்துதல் வேண்டும்.
வைத்திய சாலையில் தரப்பட்ட மருந்துகளை ஒழுங்காக சொல்லிக் கொடுத்த முறையில் பாவித்தல் வேண்டும்.
முக்கியமாக மருந்துப்பம் (Inhaler) பாவிப்பதை தவிர்க்காமல் தொடர்ச்சியாக பாவியுங்கள்