எனக்கு வயது 45. கொலஸ்ட்ரோல் அதிகமாக உள்ளது. நான் கொழுப்பு வகையான உணவுகளையும் தவிர்த்து விட்டேன். தற்போது 20mg கொலஸ்ட்ரோல் மாத்திரை பாவிக்கிறேன் இருந்தும் கொலஸ்ட்ரோல் குறைவதாக இல்லை. இதற்கு என்ன செய்யலாம்?

எனக்கு வயது 45. கொலஸ்ட்ரோல் அதிகமாக உள்ளது. நான் கொழுப்பு வகையான உணவுகளையும் தவிர்த்து விட்டேன். தற்போது 20mg கொலஸ்ட்ரோல் மாத்திரை பாவிக்கிறேன் இருந்தும் கொலஸ்ட்ரோல் குறைவதாக இல்லை. இதற்கு என்ன செய்யலாம் இதற்கு ஆலோசனை கூறுங்கள்.
குருதியிலே கொலஸ்ரோல் அதிகம் உள்ள நிலையை ஒரு நோய் என்று கருதவேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு வேறு நோய்கள் வருவதை தடுப்பதற்காக உங்களின் கொலஸரோலை கட்டுப்பாட்டில் வைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. இதற்கு நீங்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை அதிகம் உண்ண வேண்டும்.

ஆரோக்கியமான உணவுவகைகளாவன மீன், கோழி இறைச்சி, இறால், சுறா, பருப்பு, பயறு, உழுந்து, மரக்கறிவகைகள், பழவகைகள், ஆடை நீக்கிய பால், முட்டை வெள்ளைக்கரு, கௌப்பி, சோயா அவரை, மோர், முட்டுத் தேங்காய் போன்றவை ஆகும். இவற்றை எல்லாம் அதிகம் உண்பதை கடுமையான உணவுக் கட்டுப்பாடு என்று நீங்கள் கருதத்தேவையில்லை உணவில் சீனி, எண்ணெய் அல்லது கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது அனைவருக்குமே நல்லது.

மேலும் தினந்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தல் சிறந்தது, உதாரணமாக வேகமாக நடத்தல், மெதுவாக ஒடுதல், சைக்கிள் ஓடுதல், நீந்துதல், விளையாடுதல், போன்றவற்றில் ஈடுபடலாம்.

இவற்றை சரியாக கடைப்பிடித்தும் கொலஸ்ரோல் கட்டுப்பாட்டில் இல்லாவிடில் நீங்கள் தற்போது Atorvastation 20mg பயன்படுத்தினால் மேலும் அதன் அளவை கூட்டி பயன்படுத்தலாம். அல்லது rosuvastation 20mg மருந்தை அதற்கு பதிலாக பயன்படுத்தலாம். எதுவாக இருப்பினும் உங்களுடைய மருத்துவரை அணுகி மேற்குறிப்பிட்ட இருமுறைகளில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்