நாளாந்தம் பசுப்பால் அருந்துவதால் சளிபிடிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?

நாளாந்தம் பசுப்பால் அருந்துவதால் சளிபிடிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?.
சிலருக்கு பால்குடிக்கும் போது சளிபிடிப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுகிறது. இதற்கு காரணம் பசுப்பாலிற்கு அவர்களில் ஏற்படும் ஒரு ஒவ்வாமை வகையான வெளிப்பாடாகும். பால்குடிக்கும்போது சளிபிடிக்கும் தோற்றப்பாடு ஒரு பிரச்சினையாக அமைந்தால் பசுப்பால் குடிப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. எனவே நீங்கள் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு பால்மா வகைகள் அல்லது ஆட்டுப்பாலைப் பாவித்து பாருங்கள் அதனால் உங்களிற்கு ஒரு பிரச்சினையும் ஏற்படாவிடின் தொடர்ந்து பாவிக்கலாம். உங்களிற்கு எல்லா வகையான பால், பால்மா, பால் சேர்த்த உணவுவகைகள் அனைத்திற்கும் ஒவ்வாமை வகையான தாக்கம் ஏற்படின் பால் உற்பத்தி பொருட்களைப் பாவனையை முற்றிலும் நிறுத்திவிட்டு வேறுவகையான புரதங்களை, சோயா, பால், முட்டை, மீன், என்பவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.