எனது இரண்டு விதைகளும் விதைப்பையினுள் இருக்கின்றது. ஆனால் ஒன்று உயரமானதாகவும் மற்றையது பதிவாகவும் உள்ளது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

எனக்கு வயது 31 எனது இரண்டு விதைகளும் விதைப்பையினுள் இருக்கின்றது. ஆனால் ஒன்று உயரமானதாகவும் மற்றையது பதிவாகவும் உள்ளது. இது ஒரு நோயா? இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர வித்தியாசம் என்பது இயற்கையானது. இது நோயின் அறிகுறி அல்ல. உங்களுடைய விதைப்பையில் ஒரு விதை மாத்திரமே இருந்து மற்றையதை அடையாளப்படுத்த முடியாமல் இருந்தால் உடனடியாக நீங்கள் வைத்திய ஆலோசனையைப் பெறவேண்டும். விதையானது விதைப்பையினுள் இறங்காது வயிற்றினுள்ளேயே காணப்படின் பல பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் உங்கள் விதையானது விதைப்பையினுள் இறங்கியிருப்பதால் இது பற்றிக் கவலை கொள்ளத்தேவையில்லை.