உடம்பு முழுவதும் அடிக்கடி கடித்து, தடித்து பின் தானாக மறைகின்றது. இந்த நிலைமை ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது. இந்த நிலைமைக்கு காரணம் என்ன?

எனக்கு உடம்பு முழுவதும் அடிக்கடி கடித்து, தடித்து பின் தானாக மறைகின்றது. தோலில் நிரந்தரமான எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலைமை ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது. இந்த நிலைமைக்கு காரணம் என்ன? நான் என்ன செய்ய வேண்டும்??

இந் நிலைமையானது ஒவ்வாமை காரணமாக ஏற்படுகின்றது. இவ் ஒவ்வாமை நிலைமையானது சில வகை உணவுகள், சுற்றாடலில் காணப்படுகின்ற ஒவ்வாமையை ஏற்படுத்துகின்ற சில பதார்த்தங்களைத் தொடுவதன் மூலமும், சுவாசிப்பதன் மூலமும் இந்நிலைமை ஏற்படலாம். எனவே இந் நிலைமையைத் தோற்றுவிக்கும் காரணிளைக் கண்டறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட சிலரில் இந்நிலைமையானது எந்த விதமான காரணங்களும் கண்டறியப்படாமலும் ஏற்படலாம். இதனை நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வாமையைத் தடுக்கும் சில மாத்திரைகள் பாவிக்க வேண்டி ஏற்படலாம். சில வேளைகளில் சில நோய்களின் அறிகுறிகளாகக் கூட மேற்கூறிய நிலைமை காணப்படலாம். உங்களுக்கு இந்த நிலைமையானது 6 மாதங்களுக்கு மேலாக நீடிப்பதால் வைத்தியர் ஒருவரை நாடி சில சோதனைகளும், அறிவுரைகளும் சிகிச்சை முறைகளும் பெற்றுக் கொள்வது நல்லது