தினமும் பழங்களை உண்டு பயன் பெறுவோம்

தினமும் பழங்களை உண்டு பயன் பெறுவோம்
பதப்படுத்தப்பட்ட பழங்கள், நாள்பட்ட பழங்களை உண்பதை விட புதிய பழவகைகளை எம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் போசாக்கு அதிகமாகக் கிடைக்கும். கோடை காலங்களில் கூடிய அளவில் பழவகைகளை நாம் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது. ஏனெனில் பழவகைகளில் கூடியளவு நீர்ப்பற்று இருப்பதானால் நாம் இழக்கும் நீரினை சமப்படுத்த இது ஏதுவாக இருக்கும்.

பழங்களில் குறைந்த அளவிலேயே கொழுப்புச்சத்து இருக்கின்றது. கூடிய அளவு நார்ப்பொருள்கள் காணப்படுகின்றன. இதனால்

எம்முடைய உடற்பருமனை குறைத்து ஆரோக்கிய உடலை அடைய முடியும்.
உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறையும்.
குருதி அமுக்கம் குறைவடையும்.
எமது உணவில் கூடியளவு பழங்களை சேர்த்துக்கொண்டால் புற்றுநோய், சலரோகம், இருதயநோய் உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
பழங்களில் கலோரிப் பெறுமானம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.
கனியுப்புக்களும், விற்றமின்களும் போதுமான அளவு காணப்படுகின்றன.
தர்ப்பூசணி மற்றும் பேரீச்சையில் எதிர்பார்க்கப்படக்கூடிய இரும்புச் சத்தை நாம் பெறமுடியும்.
நெல்லி, கொய்யா போன்ற பழங்களில் கூடியளவு விற்றமின் “சி” யை பெறலாம்.
மஞ்சள் நிறப் பழங்களில் விற்றமின் ”ஏ”யைப் பெறமுடியும். இவை பார்வைக்குறைபாடு, மாலைக்கண் நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க உதவும்.
பப்பாசிப்பழம் – நீரிழிவு நோய்க்கு உகந்தது.
கொய்யா – மலச்சிக்கலைப் போக்கும்.
எலும்பிச்சை – சமிபாட்டுக் குறைபாட்டால் ஏற்படும் வாந்தியைப் போக்குகின்றது.
விளாம்பழம் – முகத்தை இளமையாக மற்றும் இதயத்திற்கு விலிமை தரும், நரம்புகளுக்கு வலிமை தரும், பித்தம், தலைவலி, கண்பார்வை மங்கல், வாயில் கசப்பு, கை, கால்களில் அதிக வியர்வை, நாவில் ருசியற்ற நிலையை மாற்றும்.
வாழைப்பழம் இதயத்தை பாதுகாக்கும்.
திராட்சைப்பழம் – இதயத்தை பாதுகாக்கும்.
சத்துப் பெறுமானம் ( பழங்கள் 100 கிராமுக்கு கணக்கிடப்பட்டுள்ளது)

காலத்துக்கு காலம் எமக்கு வெவ்வேறு விதமான பழங்களை மலிவாகப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. நாளுக்கு ஒரு பழம் என்பதை நாம் கடைப்பிடித்தால் நோய்களில் இருந்து எம்மைக்காப்பாற்றிக் கொள்ளலாம்.

எளிமையும் எண்ணற்ற சத்துக்களையும் கொண்டது பழங்கள், இவை உணவை ருசியாக்குவதுடன் மருத்துவ ரீதியிலும் எமக்கு உதவுகின்றன. பழைய ரிஷிகள், முனிவர்கள் தம் வாழ்வில் பழங்களை மட்டுமே உட்கொண்டு உயிர் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு கூறும் உண்மை. எனவே கிடைக்கும் காலங்களில் கிடைக்கும் பழங்களை கூடியளவு உட்கொள்வது மிகவும் சிறந்தது. குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்களை வாங்கிச் செல்வதை விடுத்து பழங்களை வாங்கி கொண்டு செல்லுங்கள்.

ஷாலினி புவனேசமூர்த்தி