அல்ஸைமர்ஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகளின் வேகத்தைக் குறைக்க ஒரு புதிய மருந்து

பரீட்சார்த்தமுறையிலான புதிய மருந்து கொண்டு நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
எலி லிலி என்கிற மருந்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் “சொலானெஸுமேப்” என்ற இந்த புதிய மருந்து, டிமென்ஷியா நோய் முன்னேறும் வேகத்தை சுமார் 33 சதவீதம் குறைக்கும் என்று தெரிவிக்கிறது. அதாவது இந்த குறிப்பிட்ட மருந்தை, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய்த்தாக்கத் துவங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கொடுத்தால் இந்த அளவுக்கு பலன்கள் கிடைக்கும் என்கிறது இந்த ஆய்வு.
இந்த மருந்தைக் கொண்டு இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு செய்யப்பட்ட பரிசோதனைகளில் இது பெருமளவு தோல்வியில் முடிந்ததாகவே கூறப்பட்டது. அல்ஸைமர்ஸ் நோயின் ஆரம்பகாலத் தாக்குதலுக்கு உள்ளானர்வர்கள் மற்றும் நோயின் தாக்கம் ஓரளவு பரவத்துவங்கியவர்கள் மத்தியில் அந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புதிய தரவுகள் இந்த மருந்தை பயன்படுத்தியவர்கள் மத்தியில் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டிருக்கின்றன.
தீவிரத்தன்மை குறைந்த அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இந்த மருந்து என்னவிதமான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்பதை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பரிசோதனை செய்ததில் கிடைத்த முடிவுகளே தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
வாஷிங்டனில் நடந்துவரும் அல்ஸைமர்ஸ் நோய் தொடர்பான சர்வதேச மாநாட்டில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன