எனக்கு நீரிழிவு நோய் உள்ளது. இதனால் பாலியல் பிரச்சினைகள் வருமா?. குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்குமா?.

வயது 32 ஆண் தற்போது தான் திருமணம் முடித்தேன். ஆனால் எனக்கு நீரிழிவு நோய் உள்ளது. இதனால் பாலியல் பிரச்சினைகள் வருமா?. குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்குமா?.
நீரிழிவு நோயை தகுந்த முறையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் ஏனைய சுகாதரப் பிரச்சினைகள் ஏற்படுவதைக் குறைக்க முடிவதைப்போலவே, பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளையும் பெருமளவில் தவிர்த்துக் கொள்ள முடியும். எனவே குழந்தைகள் பெற்றுக் கொள்வதிலும் பிரச்சினைகள் இருக்க போவதில்லை. நீங்கள் இது சம்பந்தமாக மனக்குழப்பம் அடையத் தேவையில்லை. நீரிழிவை மருத்துவ ஆலோசனைகளுக்கமைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் அநாவசிய பிரச்சினைகளைத் தவித்துக் கொள்ளலாம்.