ஜம்புப் பழமும் ஜம்பு ஜீஸீம்

ஜம்புப்பழம் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். உயிர்ச்சத்து C கொண்டதும், சுவையானதும், கண்களைக் கவரும் நிறம் உடையதுமு், குழந்தைகளுக்கு விருப்பமானதும், கோடைகாலத்துக்கு ஏற்றதுமான ஜம்புப்பழம், உடல் எடையைக் குறைக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவும். ஜம்புப்பழத்தில் உள்ள சத்துக்கள் (100கிராமுக்கு கணக்கிடப்பட்டுள்ளது)

ஈரப்பதன் – 83.7g
புரதம் – 0.7g
கொழுப்பு -0.3g
நார்ப்பொருள் -0.9g
மாப்பொருள் – 14.0g
சக்தி – 62 Kcal
கல்சியம் – 15mg
இரும்பு -0.43mg
கரோட்டின் -48 micro g
விற்றமின் c – 18 mg

ஜம்பு ஜீஸ்
தேவையான பொருட்கள்

ஜம்புப் பழம் – 10 ( விதை நீக்கப்பட்டவை)
பால் – 2கப்
வனிலா – 1 தேக்கரண்டி
ஐஸ்கட்டி
கஜீ – 25 கிராம்
பிளம்ஸ் – 25 கிராம்
மிளகுத்தூள் – சிறிதளவு ( விரும்பினால்)
உப்புத்தூள் – சிறிதளவு ( விரும்பினால்)

செய்முறை

ஜம்புப்பழங்கள், தண்ணீர், பால், வனிலா, மிளகுத் தூள் (விரும்பினால்), உப்பு சிறிதளவு ( விரும்பினால்) இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அடிக்கவும். பின் கஜீ, பிளம்ஸ், ஐஸ்கட்டி போன்றவற்றுடன் சேர்த்துப் பரிமாறலாம்.

பழங்களில் கலோரிப் பெறுமானம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் உடற்பருமனைக் குறைத்து, ஆரோக்கியமான உடலைப் பேண முடியும். எண்ணற்ற சத்துக்களைக் கொண்டது ஜம்புப்பழம், தண்ணீர்த் தாகத்துக்கு மாத்திரமல்ல, உயிர்ச்சத்து, கனியுப்புக்கள் நிறைந்த ஒரு பழமாகவும் இது திகழ்கின்றது. நீரிழிவு நோயாளர்களும் ஜம்புப்பழத்தை உட்கொள்ளலாம். குழந்தைகளுக்கு கரட் ஜீஸீடன் ஜம்பு ஜீஸையும் சேர்த்துக் கொடுக்கலாம்.

பழமுதிர்ச்சோலையாக இல்லாது போனாலும் வீட்டிற்கு ஒரு ஜம்புமரம் நட்டுப் பயன்பெறுவோம்.

ஷாலினி புவனேசமூர்த்தி
Bsc.Foods Nutrition and Diet Therapy