மனிதனை ஒத்த உயிரினம் கண்டுபிடிப்பு

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரருகில் உள்ள குகையொன்றில் இதுவரை நமக்குத் தெரியவராத மனிதனை ஒத்த உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனித இனமும் அங்கமாகவுள்ள ‘ஹோமோ’ என்ற உயிரினப் பிரிவில் இவ்வினமும் சேர்க்கப்பட்டுள்ளது.
மனித இனத்தின் முதல் மூதாதையர்களில் ஒன்று இந்த இனம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரருகில் உள்ள குகையொன்றில் இந்த மனிதனை ஒத்த புதிய உயிரினத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இந்தக் குகையில், புதைக்கப்படுவதற்கான இடமாக இருந்திருக்கக்கூடிய ஆழமான நிலவறை ஒன்றில் இருந்து பதினைந்து உடற்பாக எலும்புகளின் நூற்றுக்கணக்கான சிதறல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இனத்துக்கு செஸோதோ மொழியில் நட்சத்திரம் என்ற பொருள் தருக்ன்ற நலெடி என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.
.