இடுப்பு நோ ஏற்படுவதை தடுப்பது எப்படி? – சிவசுகந்தன்

பொதுவாக பலருக்கு இப்பிரச்சினை உள்ளது. இதற்கு தொடர்ச்சியாக நோ மருந்துகளை பாவிப்பது நல்லதன்று. நீங்கள் தினமும் இருக்கும்போதும், நடக்கும்போதும்.நித்திரை கொள்ளும் போதும் வேலை செய்யும் போதும் , வாகனம் செலுத்தும் போதும் உங்கள் உடலை சரியான நிலையில் வைத்திருந்தால் இடுப்பு வலி குறையும்.

நான் எவ்வாறு கதிரையில் அமரவேண்டும்?

 • இருக்கும்போது ஒருபோதும் தொடையில் பாரம் தாங்கி இருக்கக்கூடாது.
 • ஒருமணித்தியாலத்துக்கு மேல் தொடர்ந்து அமரக்கூடாது.
 • கதிரை உங்கள்கீழ் இடுப்பிற்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
 • நீங்கள்குனியவேண்டி இருப்பின் ஒருபோதும் கழுத்தையோ அல்லது முதுகையோ வளைத்து குனிய வேண்டாம். இடுப்பை வளைத்து குனியவேண்டும்.
 • ஒருபோதும் கதிரையில் இருந்து கொண்டுதுங்க கூடாது.
 • கால்களைகுறுக்காக போடுவது கால்களுக்கான குருதியோட்டத்தை பாதிக்கும்.

p1

எவ்வாறு நடக்கவேண்டும்?

 • ஒருபோதும் உடலை முன்னோக்கி நகர்த்த கூடாது.
 • கால்கள்முன்நோக்கி நகர்தி நகர வேண்டும்.
 • தோள்பட்டை கைதளர்வாக இருக்க வேண்டும்.

எவ்வாறு துங்கவேண்டும்?

 • ஒருபோதும் குப்புறத்துங்கக்கூடாது.
 • கைகளை பிடரியில் கட்டிய படிதுங்கக்கூடாது.
 • ஒருபக்கமாக கால்களை மடித்துக் கொண்டு கைகளை தளர்வாக வைத்துக்கொண்டு தூங்க வேண்டும்
 • நேராக படுப்பதாயின் முழங்காலுக்கு கீழே தலையணையைவைக்கக் கோண்டு தூங்கவேணடும்.
 • மெத்தை இறுக்கமானதாக இருக்கவேண்டும்.
 •  நித்திரையால்எழும்பும்போது உடனடியாக எழும்பக் கூடாது. முதலில் மெத்தையின் ஓரத்துக்கு வரவேண்டும். பின்கால்களை நிலத்தில் ஊன்ற வேண்டும். பின் கைகளின் உதவியுடன் எழுந்து அமரவேண்டும். பின்மெதுவாக எழும்ப வேண்டும்.

p2

எவ்வாறு நிற்க வேண்டும்?

 • நிமிர்ந்துநேராகநிற்கவேண்டும்.
 • நின்றுகொண்டு வேலைசெய்வதாயின் ஒருசிறு குற்றியின் மேல் காலை உயர்த்திவைத்துக்கொண்டு  நிற்க வேண்டும்.

p3

எவ்வாறு வாகனம் செலுத்த வேண்டும்?

 • இருக்கையை முழங்கால் சிறிதளவு மடித்தி ருக்ககூடியவகையில் முன்னோக்கிசரிசெய்யவேண்டும்.
 • உங்கள் இடுப்புக்கும் இருக்கைக்கும் இடையில் குஷன் வைத்திருத்தல்.

p4

எவ்வாறு பாரங்களை துக்கவேண்டும்? 

 • ஒருபோதும் முழங்காலை மடிக்காமல் இடுப்பை வளைக்கக்கூடாது.
 • இடுப்பை நேராக வைத்துக்கொண்டு முழங் காலை மடித்து பொருளை தூக்கவேண்டும்.
 • துக்கிய பொருளை உடலுக்கு அருகாக பிடித்துக் கொண்டே கொண்டு செல்லவேண்டும்.

p5

 

 

வைத்தியர் சிவசுகந்தன்