கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? – Dr. க.சிவசுகந்தன்

எல்லோருக்குமே சிலவேளைகளில் கோபம் ஏற்படுவதுண்டு. இக்கோபமானது உளநிலையை பாதிக்கின்ற அதேவேளை உடல்நிலையையும் பாதிக்கிறது. இதனால் கோபத்தை கட்டுப்படுத்துவதென்பது மிக முக்கியமான தொன்றாகும்.

நான் கோபம் வந்தால் என்ன செய்யலாம்?

 1.  நீங்கள் கோபமடைவதை உணர்ந்தால் சிறிதளவு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் என்ன வேலை செய்தாலும் அதை நிறுத்தி விட்டு கோபமூட்டும் சந்தர்ப்ப த்திலிருந்து சிறிது விலகுங்கள். உதாரணமாக வேலை செய் யுமிடத்தில் கோபம் ஏற்படின், உடனடியாக அவ்விடத்தை விட்டுவெளியேறி பின் கோபம் தணிந்தபின் மீண்டும் உள்நுழையவும்.
 2. நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள்.
  அதாவது மனதில் மூன்று விநாடிகளை எண்ணிக்கொண்டு மூச்சை உள்ளிழுக்கவும். அவ்வாறு மூன்று விநாடிகளை எண்ணிக்கொண்டு மூச்சை பிடித்து வைத்திருங்கள் அதேபோன்று மூச்சை வெளிவிடும்போதும் மூன்று விநாடிகளை எண்ணுங்கள். இவ்வாறு செய்யும் போது எண்ணுவதில்தான் உங்கள் ਾਂ! இருக்க வேண்டும். இதனால் கோபம் குறையும்.
 3. உங்கள் மனதை அமைதியடைய செய்த பின்னரே  கோபத்தை காட்டுங்கள். இதனால் உங்கள் கோபத்தின் வீறு குறையும் அதேவேளை மற்றவர்க்கு கோபத்தால் ஏற்படும் பாதிப்பும் குறையும்.
 4. கோபத்தைகாட்ட முன் ஒருமுறை யோசியுங்கள், அத்துடன் கோபத்தை வெளிக்காட்டக் கூடிய ஆரோக்கியமான வேறு வழிகளையும் யோசியுங்கள்
 5. உங்களுக்கு நீங்களே தைரியமூட்டல்- அதாவது யாரும் உங்களுக்கு பேசினால் அவருக்கு ஏதோ பிரச்சினை இருப்பதால் தான் உங்களுடன் இவ்வாறு பேசுகிறார் என்று நினைத்தால் உங்கள் கோபம் குறைந்துவிடும்.
 6. நீங்கள் உங்கள் நெருங்கிய நண்பரிடமிருந்து உத வியை பெறலாம்

நான் இனிமேலும் கோபம் வருவதை எவ்வாறுகுறைத்துக்கொள்ளலாம்.?

 1. தினமும் ஒழுங்காக உடற்பயிற்சி செய்தல்- இதனால்! உடலில் உருவாகும் சில பதார்த்தங்கள் உங்களுக்கு கோபம் ஏற்படும் தன்மையை குறைக்கும்.
 2. இதற்காக தினசரி பதிவேடு ஒன்றை நீங்கள் பாவிக்கலாம். அதாவது தினமும் நீங்கள் கோபப்படும் சந்தர்ப்பத்தை விளக்கமாக எழுதுங்கள்- கோபமூட்டும் சந்தர்ப்பம், நீங்கள் நடந்துகொண்ட விதம், எவ்வாறு இதை திறம்பட கையாண்டிருக்கக் கூடும் என்பது பற்றியும். இவற்றை மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது உங்களில் ஏற்படும்  மாற்றத்தை நீங்களே உண்ர்வீர்கள்.
 3. இவ்வாறான பிரச்சினைகள் பற்றி கலந்துரையாட விசேட நிபுணர்கள் உள்ளனர். அவர்களிடம் உங்கள் பிரச்சினைகளை கூறி அறிவுரை பெறலாம்.

Dr. க.சிவசுகந்தன்