சிந்தனைக்கு – சி.சிவன்சுதன்

எமது பிரதேசத்தில் இயற்கையாக மருந்து தெளிக்காது வளரக்கூடிய ஆரோக்கியமான உணவுப் பயிர்களுக்கு தவறான அவப்பெயர்களை கட்டிவிட்டு செயற்கையான இரசாயனப்பொருட்கள் சேர்க்கப் பட்டு பொதிசெய்யப்பட்ட பல பொருட்கள் விளம்பரங்களுடன் விற்பனையாகிக் கொண்டிருப்பது வேதனையான விடயம். “அகத்தி மரத்தைவீட்டில் வளர்த்தல் கூடாது”, “தவசிமுருங்கை சாப்பிட்டால் புற்றுநோய் உண்டாகும்”, “சிறுகுறிஞ்சா உட்கொண்டால் சிறுநீரக கோளாறு உண்டாகும்”. இவ்வாறாக பலகட்டுக்கதைகள் நம்மத்தியில் பரப்பப்பட்வரு வதுடன் அதை நம்பி பலர் செயற்கை உணவுகளின் காலடியில் சரணாகதி அடைந்துவருகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் என்ன?

சி.சிவன்சுதன்
பொதுமருத்துவ நிபுனர்.