உங்கள் உடல் நிறை எவ்வளவாக இருக்க வேண்டும்? – Dr.க.சிவசுகந்தன்

உடற்பருமனானது எமது உடல் ஆரோக்கியத்தை பாதிக் கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இது உடல் ஆரோக் கியத்தை மட்டுமல்லாது, உள ஆரோக்கியம் மற்றும் சமூக ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதனால் உடலில் பல் வேறுபட்ட நோய்கள் உண்டாகின்றன. இதனால் நீரிழிவு நோய், உயர்குருதியமுக்கம், மூட்டு வாதம், நித்திரைக்குழப்பம், பித்தப்பையில்கற்கள் உரு வாதல், நுரையீரல் நோய்கள். பாரிசவாதம், புற்றுநோய்கள் போன்றன ஏற்படுகின்றன.

உடற்பருமனை அளவிட சிறந்த அளவுகோல் உடல் திணிவு சுட்டெண் ஆகும்.

நான் உடல் திணிவு சுட்டெண்ணை எவ்வாறு அளப்பது?

  • உங்கள் நிறையை மீற்றர் அலகில் அளவுங்கள்.
  •  உங்கள் உடல் நிறையை கிலோகிராம் அலகில் கணியுங்கள்.
  • பின்பு சமன்பாட்டில் போட்டு உங்கள் உடல் திணிவு சுட்டியை கணியுங்கள்.

p2

எனது நிறை 62 kg. உயரம் 163 cm, எனது BMI எவ்வளவு?

p3

எனது உடல் திணிவு சுட்டியை எந்த வரையறைக்குள் வைத்திருக்க வேண்டும்?

  1. குறைந்த அளவு-18.5 இலும் குறைவு
  2. போதுமான அளவு 18.5-23
  3. கூடிய எடை 23-27.5
  4. மிக கூடிய எடை 27.5 க்கு மேல்

நான் இப்போது பருமனான உடலை கொண் டுள்ளேன். எனது உயரம் 170 Cm. நான் அடைய வேண்டிய உடல் நிறை எவ்வளவு

p4

இதை எல்லோருக்கும் பயன்படுத்தலாமா?

இல்லை, வளரும் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார், உடலில் தசைத் திணிவு கூடியவர்கள் (விளையாட்டு வீரர்கள்) உபயோகிக்க முடியாது.

BMI மட்டும் குறிப்பிட்ட வரையறைக்குள் இருந்தால் போதுமா?

இல்லை. உங்கள் இடுப்பு சுற்றளவும் குறிப் பிட்ட வரையறைக்குள் பேணப்பட வேண்டும். சிலருக்கு உடல் மெலிவு காரணமாக BMI குறை வாக காணப்படும். ஆனால் அவர்களின் வயிற்றுப் பகுதியில் கூடிய அளவு கொழுப்பு படிவு காணப்படலாம்.

p5

Dr.க.சிவசுகந்தன்