கர்ப்பத்தடை ஊசி பாவிக்கிறேன். மாதவிடாய் பிந்துகின்றது. இதனால் கர்ப்பம் தங்க வாய்ப்பு உள்ளதா??

கர்ப்பத்தடை ஊசி பாவிக்கிறேன். மாதவிடாய் பிந்துகின்றது. இதனால் கர்ப்பம் தங்க வாய்ப்பு உள்ளதா?

கர்ப்பத்தடைக்காக வழமையாக பயன்படுத்தப்படும் ஊசியானது Depo Provera ஆகும். இவ் ஊசிமருந்தானது 12 வாரங்களிற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும். இவ் ஊசி மருந்தை பயன்படுத்தும் போது ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் வருவது சாதாரணம். சிலருக்கு ஊசிமருந்து பாவிக்கும் காலப்பகுதியில் மாதவிடாய் வருவதில்லை. இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இவ் ஊசிமருந்து பயன்படுத்தும் போது கர்ப்பந்தரிப்பதற்குரிய அளவு மிகக் குறைவு. ஆய்வுகளின் அடிப்படையில் கர்ப்பந்தரிப்பதற்குரிய சந்தர்ப்பம் 0.1 தொடக்கம் 2 வீதம் ஆகும். இது ஒழுங்கான முறையில் 12 வாரங்களிற்கு ஒரு முறை ஊசிபோடுவதால் மேலும் குறைவடையும்.

Dr.பா.மேனகா