வாழைப்பழத்தைப் பற்றிய சில தகவல்கள் எஸ்.சுதாகரன்

வாழை ஒரு மரவகையைச் சேர்ந்ததல்ல. அது ததாவர வகையைச் சேர்ந்தது. பூண்டுத் தாவரங்கள் சேர்ந்த பேரினம். உலகிலேயே பெரிய தாவரம் வெப்பம் மிகுந்த ஈரலிப்பான கால நிலையிலேயே இது வளருகின்றது.

உலகில் எல்லாப் பாகங்களிலும் எல்லா நேரங்களிலும் விலைகுறைவான அதேவேளை எல்லாச் சத்துக்களும் நிறைந்த பழம் வாழைப்பழமாகத்தான் இருக்கும். எமது சமூகத்தில் குழந்தைகளுக்கு முதல் ஊட்டும் பழம் அதிகமாக வாழைப்பழமாகத் தான் இருக்கின்றது. எனவே சிறியோர் முதல் பெரியோர் வரை பயன்படுத்தக்கூடிய இலகுவில் ஜீரணிக்கக்கூடிய கட்டமைப்பைக் கொண்டுள்ள பழம் வாழைப்பழம் ஆகும். இதில் காணப்படும் ஃபருக்டோசும், குளுக்கோசும் உடலுக்கு உடனடியாகவே ஆற்றலையும், சக்தியையும் கொடுக்க வல்லவை, வாழைப்பழத்தைப் பற்றிய சில தகவல்கள்

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து மட்டுமல்ல. நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்த்தடுப்பு நாசினியும் கூட இன்றைய விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகில் தரமான உணவு வாழைப்பழம் என பரிந்துரை செய்கின்றார்கள்.
நமது மூளை அமைதியடைய செரா டோனின் என்னும் கூட்டும் பொருள் தேவை. இந்த செராடோனின் உற்பத்தியாவதற்கு காரணமாகப் ட்ரைப் டோபன் ( Triptoptan) என்கின்ற அமினோ அமிலம் உள்ளது. இந்த Triptoptan வாழைப்பழத்தில் ஏராளம் உள்ளது.
வாழைப்பழம் உலர்ந்து சருமத்துக்கு மிகுந்த ஈரப்பதனை அளிக்கக் கூடியது. இதில் காணப்படும் பொட்டாசியம் மூளையின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
எல்லாக் காலநிலைகளிலும் கிடைக்கும் பழம் வாழைப்பழம், இதர ஏனைய பழங்களைப் போல் இது வாழை மரத்திலேயே சரிவரக் கனிவதில்லை. அவை காயாகவே இருக்கும்போது குலை வெட்டப்பட்டுகிறது. பழுக்கவைக்கப்படுகின்றன. இதன் காரணமாக வாழைப்பழத்தை வெகு தூரமான இடங்களுக்கு அனுப்புவது சாத்தியமாகிறது.
வாழைப்பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் பலவலாக அடங்கி இருந்தாலும் பொட்டாசியத்தைத் தவிர்ந்த வேறு எந்த தனிப்பட்ட மிகுந்த அளவில் இல்லை. இந்தத் தாது உப்பு, மற்றத் தாது உப்புக்களைப் போல் உடல் நலத்துக்கு மிகவும் இன்றியமையாதது. வாழைப்பழத்தில் சோயடியம் சத்து மிகவும் குறைவு, சோடியம் அற்ற உணவாகவும், உப்பு. கொழுப்பு அற்ற உணவாகவும் ( கொலஸ்ரோல் இல்லை) வாழைப்பழம் காணப்படுகின்றது. இதனுடைய மென்மையான கட்டமைப்புக் காரணமாக இருதய நோயாளிகள் உயர்குருதி அமுக்கம், வயிற்றுப்புண் (அல்சர்) மற்றும் மலச்சிக்கல் போன்ற நோயாளிகளுக்கு இது சிறப்பான உணவாகும்.
வாழைப்பழத்தில் மிதமான கலோரியே அடங்கியிருப்பதால் உடல் எடை குறைப்பு உணவிலும் இது இடம்பெறுகிறது. அத்துடன் இதனை உண்பவருக்குச் சிறந்த திருப்தியை அளிக்கின்றது.
பழுக்காத வாழைக்காயில் கார்போவைதரேட், மாப்பொருள் வடிவில் உள்ளது, நன்கு பழுக்க வைக்கும் போது இந்த மாப்பொருள், சுக்குரோஸ் குளுக்கோஸ், ஃபரக்ரோஸ் போன்ற வெல்லங்களாக மாற்றமடைகின்றது. நன்கு பழுத்த வாழைப்பழத்தைச் சாப்பிடும் போது இந்த வெல்லங்களின் ஒரு பகுதி உடனடியாக எமது உடலால் உட்கவரப் படுகிறது. அடுத்த 15 நிமிடங்களிலேயே குருதியில் வெல்லமட்டம் அதிகரிப்பதை அவதானிக்கலாம். மீதி உணவுப்பகுதி சற்று மெதுவாக உடலால் உட்கவரப்படுகிறது. இது சற்று நீண்ட நேரத்திற்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கிறது. எனவே களைப்பான நேரங்களில் வாழைப்பழங்களை உண்டால் உடலும், மனமும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

எஸ்.சுதாகரன்