3½வயது மகளுக்குகாய்ச்சல் கூடும்போது பனடோல் கொடுக்கிறேன். அயல் வீட்டுக்காரரோ “காய்ச்சல் தானாக மாறும் பனடோல் உடலுக்குக்கூடாது” என்கின்றார். சற்று விளக்குங்கள்.

எனது 3½வயது மகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் கூடும்போது பனடோல் கொடுக்கிறேன். எனது அயல் வீட்டுக்காரரோ “காய்ச்சல் தானாக மாறும் பனடோல் உடலுக்குக்கூடாது” என்கின்றார். இது பற்றி சற்று விளக்குங்கள்.

குழந்தைகளுக்கு பனடோல் எடுப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பு மோசமானதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை கூடும்போது ”காய்ச்சலினால் உண்டாகும் வலிப்பு” ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படும். ( 5வயதுக்குட்பட்டவர்களில் இது ஏற்படுவது சாதாரணம்) எனவே காய்ச்சலின் போது உடல் வெப்பநிலையைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவையாவன.
வைத்தியரின் ஆலோசனைக்கேற்ப குழந்தையின் நிறையை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ற அளவில் பனடோல் கொடுத்தல் வேண்டும்.
பனடோல் 6 மணித்தியாலத்துக்கு ஒரு தடவை கொடுத்தல் வேண்டும். 6 மணித்தியாலத்துக்குள் உடல் வெப்பநிலை அதிகரித்தாலும் பனடோல் கொடுத்தல் கூடாது. உடல் வெப்பநிலைகை் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஈரமான துணியால் குழந்தையின் நெற்றி, கழுத்து, அக்குள், அரைப்பகுதி (Genital Area) துடைத்தல் வேண்டும். காற்றோட்டமான இடத்தில் அல்லது மின்விசிறியின் கீழ் குழந்தையைப் படுக்கவைத்தல் வேண்டும்.
மெல்லிய பருத்தி ஆடைகளை அணிவித்தல் வேண்டும் 3 நாள்களுக்குள் காய்ச்சல் மாறாதுவிடின் வைத்தியசாலைக்கு குழந்தையைக் கொண்டு சென்று உரிய சிகிச்சையைப் பெறுதல் வேண்டும்.