கௌபீ பிட்டு செல்வி காசிப்பிள்ளை கெங்காதேவி

செய்முறை

தரமான கௌபீயை எடுத்து சுத்தமாக்கி வறுத்து ( அதிகம் வறுக்கக் கூடாது) அரைத்து மாவை நன்றாக அரித்து அதில் 125 கிராம் அளவில் எடுத்து சாதாரண அரிசிமா பிட்டு செய்வது போல கொதிநீர் விட்டு, அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் குழைத்து அவித்த பிட்டை இறக்கியவுடன் சூட்டுடன் தேவையான அளவு தேங்காய்ப்பூ சேர்த்துக் கிழறவும். பின் இளஞ்சூட்டுடன் சாப்பிடலாம். இந்த மாவில் இடியப்பமும் செய்யலாம். மிகவும் சுவையான சாப்பாடு அத்துடன் கலப்படம் இல்லாதது. வீட்டிலேயே தயாரிக்கலாம்.

இவ் முழுத்தாணிய உணவை இரவு சாப்பாட்டிற்காகப் பாவிக்கலாம். காலை உணவாகவும் பாவிக்கலாம். 

நன்றி


செல்வி காசிப்பிள்ளை கெங்காதேவி