முதியவர்களின் சுகாதார பிரச்சினைகள் பெரும் சவால்களை எதிர்கொள்ள காரணம் என்ன? சி.சிவன்சுதன்

பெருகிவரும் முதியவர்களின் நல்வாழ்வு நடவடிக்கைகள் இன்னும் பல மடங்கு முன்னேற்றம் பெறவேண்டும் என்கின்ற உணர்வு எம் அனைவரது மனங்களிலும் பெரும் உறுத்தலாக இருந்து கொண்டிருக்கிறது.

முதியவர்களின் சுகாதார பிரச்சினைகள் எம் மத்தியிலே ஒரு பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.

எமது நல்வாழ்விற்காக உழைத்த பல பெரியவர்கள் அடிப்படை சுகாதார வசதிகளிற்காக அவதிப்படும் நிலை ஏன் ஏற்பட்டது?. இதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி சிந்திக்கவேண்டியது அவசியமாகின்றது.

சுகாதாரம் என்னும்பொழுது அது அவர்களின் உடல் சுகாதாரத்தை மட்டும் குறித்து நிற்கலில்லை. அவர்களின் உளநிலை, மனநிலை, மன அமைதி, சமூகத்திலே அவர்களின் ஆரோக்கியமான தொடர்பு நிலைகள், மத ஆன்மீக நம்பிக்கைகளின் திருப்தி நிலை இவை அனைத்தும் சேர்ந்த ஒரு நன்னிலையே உண்மையான நல்ல சுகாதாரமான நிலை என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.

உலக சுகாதார வல்லுனர்கள் மனிதனின் உண்மையான ஆரோக்கியத்தை உடல் உள சமூக ஆன்மீக நன்னிலை என்றே வரைவிலக்கணப்படுத்தியிருக்கிறார்கள்.

முதியவர்களின் சுகாதார பிரச்சினைகள் பெரும் சவால்களை எதிர்கொள்ள காரணம் என்ன? இதற்கு பல காரணங்களை வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம்.

பெருகிவரும் முதியவர்களின் விகிதாசாரம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இது ஒரு உலகளாவிய பிரச்சினை என்பது அனைவரிற்கும் தெரியும்.

மனிதனின் பிறப்பு வீதம் குறைவடைய நாம் வாழும் சராசரி வயதெல்லை அதிகரித்து செல்ல சமுதாயத்திலே முதியவர்களின் விகிதாசாரமும் அதிகரித்து செல்கிறது.

ஆனால் இந்த பிரச்சினை எமது பிரதேசங்களிலே மிகப்பெரும் பிரச்சினையாக விசுவரூபம் எடுத்து நிற்கிறது. இதற்கு காரணம் என்ன?

காரணம் எமது இளைய தலைமுறையினர் பலர் தாய் நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்கள், வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலரை போரிலே இழந்துவிட்டோம். இதனால் ஒப்பீட்டளவில் ஆதரவற்ற முதியவர்களின் விகிதாசாரம் எமது பிரதேசங்களிலே மிகமிக அதிகமாக காணப்படுகிறது.

முதியவர்களிற்கு ஆதரவு கொடுக்க மிகப்பெரும் ஆட்பற்றாக்குறை இருந்து கொண்டிருக்கிறது.
ஆவர்களுடன் ஆற அமர உட்கார்ந்து பேசுவதற்கு இளைய சமுதாயத்தினருக்கு போதியளவு நேரமில்லாது போய்விடுகிறது.

ஆதரவாக பேசும் இந்த உணர்வுப் பரிமாற்றம் அவர்களின் உள சுகத்திற்கு மட்டுமல்ல உடல் சுகத்திற்கும் முக்கியமானதொன்றாக இருந்து வருகிறது.

முதியோர் பராமரிப்பு சம்பந்தமாக பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வும் புரிந்துணர்வும் இல்லாமலிருப்பது ஒரு வேதனையான விடயமாக இருக்கிறது.

முதியவர்களின் சிந்தனையோட்டமும் மனநிலையும் எப்படியிருக்கும் அவர்களை எவ்வாறு சுய கௌரவத்துடனும் மகிழ்ச்சியுடனும் பராமரிக்க வேண்டும் என்கின்ற அறிவு எம்மிடையே போதாமல் இருக்கிறது.

இவர்களின் மன மகிழ்ச்சியும் ஆன்மீக திருப்தி நிலையும் சுகாதார மேம்பாட்டிற்கு முக்கியமான ஒரு படிநிலை என்பது கூட பலரிற்கு தெரியாத நிலை காணப்படுகிறது.

ஒரு முதியவர் உடல்;; ரீதியாக நோய்வாய்படும்பொழுது அவரை பராமரிக்க பறிற்றப்பட்ட பராமரிப்பாளர்கள் பற்றாக்குறையும் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து நிற்கிறது. பெரும் எண்ணிக்கையில் பராமரிப்பாள்களுக்கு பயிற்சி கொடுக்கவேண்டிய தேவை இருக்கிறது.

ஆரசாங்க வைத்தியசாலைகளில் முதியவர்களிற்கென தனியான பிரிவுகள் எதுவும் ஆரம்பிக்கவில்லை. அவர்களின் நலன்களை விசேடமாக கவனிப்பதற்கென்று விசேடமான ஒழுங்கமைப்புக்கள் எதுவும் இல்லை. இது ஒரு வேதனையான விடயமாக இருந்து கொண்டிருக்கிறது.

புல முதியவர்கள் வைத்தியசாலைகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியநிலை ஏற்படுகிறது.
எனவே வைத்தியசாலைகளில் முதியவர்களின் மருத்துவ கவனிப்பை மேம்படுத்த புநசயைவசiஉ ஆநனiஉiநெ எனப்படும் ஒரு புதிய பிரிவு நிறுவப்பட்டு முதியவர்களிற்கு மேலதிக வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு சிறுவர்களிற்கான விசேட உணவு முறைகள் போல முதியவர்களிற்கும் உணவு முறையிலே விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

இந்த விடயத்திலே நாம் எவ்வளவு தூரம் கவனம் செலுத்துகிறோம் என நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். முதியோரிற்பு பால், முட்டை, மீன், மரக்கறிவகைகள் அதிகம் சேர்க்கப்பட்ட நிறை உணவு வழங்கப்பட வேண்டும்.

இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும்.

வீடுகள், வீதிகள், பொது இடங்களிலே முதியவர்கள் பாதுகாப்பாக நடமாடுவதற்கு ஏற்ற வகையில் படிக்கட்டுகள், தரைகள், குழியலறைகள், மலசலகூடம் போன்றவற்றிலே போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாத நிலை எமது பகுதிகளில் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

பல முதியவர்கள் நோய்வாய்ப்படுவதற்கு இவர்கள் தடக்கி விழுந்துவிடுவதே காரணமாக அமைகிறது. எனவே இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் பல வேண்டத்தகாத விளைவுகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.

முதியவர்களிற்கு தினமும் மருந்து எடுத்து கொடுப்பதற்கும் காலத்திற்கு காலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கும் போதுமான அளவு ஆள் உதவி இல்லாத நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாக பலர் மருந்துகளை ஒழுங்காக பாவிக்காது ஆபத்தான நிலைக்கு ஆட்பட்டுவிடுகிறார்கள்.

எனவே ஊர்கள் தோறும் சனசமூக நிலையங்கள் தோறும் முதியவர்களிற்கு உதவுவதற்காக முதியோர்களிற்கான உதவிக்குழுக்களை அமைப்பது பயனுள்ளதாக இருக்கும்.

முதியவர்கள் இலகுவில் நோய்வாய்ப்படும் தன்மை உடையவர்கள், இந்த நோய்நிலைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை இருக்கிறது.

எனவே இந்த விடயத்தில் நாம் கூடிய அளவு விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும்.

அத்துடன் முதியவர்கள் இலகுவில் கவலைப்படும்; அல்லது கோப்ப்படும் தன்மை உடையவர்கள். இதனை சரியான முறையில் கையாளத்தவறின் அவர்களின் உடல் நலமும் உள நலமும் பாதிக்கப்படும் ஆபத்து இருககிறது.

எம்மை சுற்றி இருக்கும் முதியவர்கள் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் திறமை ஒரு கலையே. இந்தக் கலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

முதியவர்களிற்கு சில விருப்பங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள், மதவழிபாட்டு மரபுகள் என்பன அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது. இவை யாவும் மதிக்கப்படவேண்டியது அவசியமொன்றானதாகும்.

வுpரதம் பிடிக்க வேண்டாம், காலையில் குளிக்க வேண்டாம், கோயிலுக்கு போக வேண்டாம் போன்ற கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஆரோக்கியம் ஆகாது.

இவர்களின் நம்பிக்கைகள் மதிக்கப்படுவது இவர்களின் சுகாதாரத்தின் ஒரு பகுதியான ஆன்மீக நன்னிலைக்கு இன்றியமையாததாக இருக்கிறது.

சமூக மட்டத்திலே அவர்களிற்குரிய கௌரவமும் மதிப்பும் கொடுக்கவேண்டிய கடமை எம் அனைவரிற்கும் இருக்கிறது.

தொடர்ந்து சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பையும் அனுபவத்தையும் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தவேண்டிய தேவையும் இருக்கிறது.

அவர்களை பாரமாக கருதாது அவர்களின் சிறுசிறு உதவிகளை நாம் பெற்றுக்கொள்வது அவர்களிற்கு மன திருப்தியை கொடுக்கும்

இது அவர்களின் சுகாதாரத்தின் ஒரு பகுதியான சமூக நன்னிலைக்கு உறுதுணையாக அமையும்.

முதியவர்கள் அனைவரிற்கும் நடத்தல் ஒரு தலை சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது அவர்களின் உடற்சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக அமையும். எனவே அவர்களை நடப்பதற்கு ஊக்குவிப்பதும் எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்;.

எனவே முதியவர்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கு சமூக மட்டத்திலும் சுகாதார மருத்துவ துறை மட்டதிதிலும் பல நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய தேவை இருக்கிறது. இதற்கு அனைத்து தரப்பினரதும் ஒன்றுபட்ட முயற்சி இன்றி அமையாதது.

சி.சிவன்சுதன்