எங்கள் வீட்டில் பசு உள்ளது. cholesterol அதிகமாக உள்ளதால் பசுப்பால் குடிக்க பயமாயுள்ளது. நான் பருகலாமா?

எங்கள் வீட்டில் பசு உள்ளது. cholesterol அதிகமாக உள்ளதால் பசுப்பால் குடிக்க பயமாயுள்ளது. நான் பருகலாமா?
பசுப்பால் ஊட்டச்சத்துள்ள உணவாகம் எல்லாவகையான போசனையையும் உள்ளடக்கியுள்ளது.ரின், பைக்கற்றில் அடைக்கப்பட்டு இரசாயணப் பொருட்கள் சேர்ந்த மா வகைகளிலும் பார்க்க பால் இயற்கையான பாதுகாப்பான ஒரு பானமாகும். எமது உணவின் கலோரிப் பெறுமான அடிப்படையில் 30% கொழுப்பு உணவாக இருக்க வேண்டும். மற்றய கொழுப்பு உணவு வகைகளை தவிர்த்து பால் குடிப்பதன் மூலம் உடலில் சேரும் கொழுப்பு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. உதாரணம் 100ml பாலில் 4.1g கொழுப்பு இருக்கின்றது. 100g தேங்காய் பூவில் 28.2g கொழுப்பு இருக்கின்றது. 100g தேங்காய் பூவை தவிர்த்தால் 700ml பாலை எவ்வித பயமுமின்றி குடிக்கலாம்.வீட்டில் உள்ள இயற்கையான பசுப்பாலை குறைந்த விலையில் விற்றுவிட்டு not fat ஐ கூடிய விலை கொடுத்து வாங்குவது புத்திசாலித்தனமானதாகாது. எனவே உங்கள் உணவில் மற்றைய கொழுப்பை குறைத்து பசுப்பாலை பாதுகாப்பாக சேர்க்கலாம்.