புதிய சத்துணவுகளை தயாரிக்க… Dr.சி.சிவன்சுதன்

நாம் உடல் ஆரோக்கியத்திற்கு என்று பயன்படுத்தி வருபவற்றை பட்டியலிட்டால் ஒட்ஸ், சத்துக்குளிசைகள், ஆட்டாமா, ரொனிக்குகள், சத்துமாப் பேணிகள், போத்தல்களில் வரும் பாணங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இவற்றை வாங்கி பாவிப்பதில் மனநிறைவும் பெருமையும் கொள்கிறோம்.

எமது மண்ணில் உற்பத்தியாகாத இறக்குமதி செய்து வரும் இந்த பொருட்கள் தான் உணர்மையான சத்துள்ளவை என நம்பி பெருமளவு பணத்தை இதற்காக அநாவசியமாக செலவு செய்து கொணிழருக்கிறோம்.

எமது சொந்த மண்ணில் உற்பத்தியாகும் ஆரோக்கியமான இயற்கையான உணவுப் பொருட்களான திட்டாத அரிசிமா ஊர்க்கோழி முட்டை, உடன் பசும்பால், மோர், விளாம்பழம், கொய்யாப்பழம், முருங்கை இலை, தவசிமுருங்கை, அகத்திப்பூ, தேசிக்காய், ஒடியல், இராசவள்ளி, இளநீர், இளநீரின் வழுக்கல், நுங்கு போன்ற பல அற்புதமான உணவு வகைகளில் நாம் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறோம்.

இவற்றை பாவித்து வருவோமாக இருந்தால் சத்துமாப் பேணிகளோ விற்றமின் குளிசைகளோ பாவிக்க வேண்டிய தேவை இருக்காது.

காலம் காலமாக பிற தேசத்தவரிடம் அழமைப்பட்டு கிடந்த நாம் உணவுப்பழக்கத்திலும் அவர்களின் முறைக்கே மாறப் போகிறோமா? அல்லது எமது சொந்த உணவு முறையை காக்கப் போகிறோமா? எமது பகுதியில் விளையும் மூலப் பொருட்களை கொண்டு புதிய சத்துணவுகளை தயாரிக்க ஏன் முயலக்கூடாது?