மரம் என்னும் மருத்துவ சுடர் – Dr.சி.சிவன்சுதன்

எமது சுகத்தையும் சுற்றாடலையும் காத்து, சூழலிலுள்ள அசுத்தக்காற்றை வடிகட்டி சுத்திகரித்து சுவாசக்காற்றான ஒட்சிசனை அள்ளி வழங்கியும், எமது சுகம் காத்து சத்துனவையும் மருத்துவ மூலிகைகளையும் தந்து, நிழலையும் குளிர்ச்சியையும்மழைவீழ்ச்சியையும் கொடுத்து, நோய்த்தாக்கங்களிலிருந்து மனிதனைக் காத்து மலர்களினால் சுற்றாடலுக்கும் மனதுக்கும் மலர்ச்சியைக் கொடுத்து, மனச்சஞ் சலங்களை நீக்கி, எமது மண்ணை கடல் விழுங்கவிடாது மண்ணரிப்பில் இருந்து காத்து, எமது உடல், உள, சமூக,ஆன்மீக நன்னிலையைக் காத்து நிற்கும் மரம் என்ற மருத்துவ சுடர்கள் பலவற்றை விடுதோறும் ஏற்றி அந்தச் சுடர்களை வளர்த்து ஆரோக்கிய வாழ்வியலில் நாமும் பங்கு கொள்வோம்.

Dr.சி.சிவன்சுதன்
பொது மருத்துவ நிபுனர்