உயர் குருதி அமுக்கம் ஒர் அறிமுகம் – த.உதயகுமார்

உயர் குருதி அமுக்கத்தினர் அறிகுறிகள்

 • பல உயர் குருதி அமுக்க நோயாளர்கள் ஆரம் பத்தில் எந்தவொரு அறிகுறிகளையும் வெளிக் காட்ட மாட்டார்கள்.
  • அதிகளவு வியர்வை உருவாகுதல்
  • தலைச்சுற்று
  • மூக்கிலிருந்து இரத்தம் வருதல்
  • தலையிடி
  • நெஞ்சு படபடப்பு
  • மூச்சுத்திணறல்
 • மேலுள்ள அறிகுறி உள்ளவர்கள் அருகிலுள்ள சிகிச்சை நிலையத்திற்குச் சென்று குருதி அமுக் கத்தைச் சோதனை செய்வது சிறந்தது.
 • சிலருக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் குருதி அமுக்கமானது சிசு பிறந்தவுடன் கட்டுப்பாட்டுக் குள் வந்து விடும்.

உயர் குருதி அமுக்கம் ஏற்படக் கூடிய சந்தர்ப் பத்தை உண்டாக்கும் காரணிகள்

 

 • பரம்பரை ரீதியான காரணிகள்
 • மன உளைச்சல்
 • அதிக உடற்பருமன்
 • மதுபானம் அருந்துதல்
 • புகைப்பிடித்தல்
 • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்
 • பெண்களிலும் பார்க்க ஆண்களுக்கு கூடுதலான சாத்தியம் உண்டு
 • சலரோகம்
 • இதய நோய்கள்
 • சிறுநீரக நோய்கள்
 • அகம் சுரக்கும் சுரப்பிகள் தொடர்பான நோய்கள்,உயர் குருதி அமுக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்
 • பக்க வாதம்இதயத் தொழிற்பாடு குறைதல்/மாரடைப்பு
 • சிறுநீரகம் பழுதடைதல்
 • கண்களில் இரத்தக்கசிவு,கண்பார்வை குறைவடைதல்

உயர் குருதி அமுக்கத்தை கட்டுப்படுத்தும் வழி முறைகள்

 • உடல் நிறையைக் குறைத்தல் – உடல் திணிவு சுட்டெண்ணை பேணுதல் உடல் நிறையைக் குறைப்பதற்கு ஒருநாளைக்கு மூன்றுமுறை வழமையிலும் குறைந்த அளவு உணவு உண்ணுதல் வேண்டும்.
 • அதிகளவு இனிப்பு, மாப்பொருள் அதிகமுள்ள உணவுகளை உடகொள்வதை தவிர்த்தல் வேண்டும் உ-ம் மரவள்ளி, ஐஸ்கிறீம்
 • அடிக்கடி உணவு உட்கொள்வதை தவிர்த்தல்
 • உணவில் அதிகளவு பழவகைகளையும் கீரை வகைகளையும் அதிக நாள் தன்மையையும் சேர்த்தல்
 • போதிய புரத உணவு (fish / soyabean)
 • ஆடை நீக்கிய பாலைப் பருகுதல் (non fat milk)
 • அதிகளவு உப்புள்ள உணவுகளை உட்கொள்ளுதலைக் தவிர்த்தல்.
  உ-ம் கருவாடு, பொரித்த உணவு, ரின் மீன்
 • கொழுப்புக் கூடிய (கொலஸ்திரோல்)உணவு உட்கொள்ளலைக் குறைத்தல்
  உ-ம் இறைச்சி, பொரித்த உணவு, பட்டர், மாஜரின்
 • தேங்காய், தேங்காயெண்ணெய் பாவனையைக் குறைத்தல்.தேவைப்படின் நல்லெண்ணெயைப் பாவித்தல். ஒலிவ் ஒயில் (olive oil) பாவிக் கலாம். தேங்காய்ப்பாலில் முதல் பிழிந்த பாலைத் தவிர்த்து மற்றைய பாலைப் பயன்படுத்துதல்
 •  தினமும் தேக அப்பியாசம் செய்தல் (குறைந்தது 30 நிமிடங்கள்)
 • தினமும் ஓரளவு உடல் ரீதியான வேலைகளைச் செய்தல்
  உ-ம் சைக்கிள் ஓடுதல், கூட்டுதல்
 • மதுபானம் அருந்துவதைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல்
 • புகைப்பிடித்தல் பழக்கத்தை தவிர்த்தல்
 • மன அழுத்தத்திற்குரிய காரணத்தைக் கண்டு நிவர்த்தி செய்தல்
 • ஒரு நோயாளி இன்னுமொரு நோயாளியு டன் தனது குருதி அமுக்கத்தை ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
 • யாராவது ஒருவர் தனக்கு குருதி அமுக்கம் இருக்கலாமென சந்தேகித்தால் அருகிலுள்ள சிகி ச்சை நிலையத்திற்கு சென்று குருதி அமுக்கத்தைச் சோதனை செய்தல் சிறந்தது.

த.உதயகுமார்
தாதிய உத்தியோகத்தர் தரம் 1
.