நீங்கள் இன்சுலின் பாவிப்பவரா? – Dr.க.சிவசுகந்தன்

இன்சுளினை யார் பாவிக்கிறார்கள்?

 • நீரிழிவு நோய் வகை 1 நோயாளிகள்(இவர்களுக்கு இன்சுலின் சுரப்பதில்லை)
 • நீரிழிவுநோய்வகை 2 நோயாளிகள் (மருந்து வில்லைகளுக்கு கட்டுப்படாவிட்டால்)
 • நீரிழிவுநோயாளர்களின் குருதியில் வெல்லத்தின் அளவு சரியான கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய தேவை ஏற்படின் (நோய் தொற்றுக்கள் ஏற்படும் போது)
 • நீரிழிவு நோய்க்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படின்.

எவ்வாறு வைத்தியர்கள் இன்சுலினுக்கு மாற்றுவர்?

 • இதற்காக நீங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவீர்கள்.
 • வைத்தியசாலையில் இன்சுலின் ஊசிபோடப்பட்டு உங்கள் குருதி வெல்லம் சரிபார்க்கப்படும்.
 • உங்கள் குருதிவெல்லம்கட்டுப்பாட்டுக்கு வந்தபின் வைத்தியர் உங்களை அதேபிரமான இன்சுலி னுடன் வீட்டுக்கு அனுப்புவர்.
 • பின்பு மீண்டும் ஒருகிழமையின் பின் குருதி வெல்லம் சரிபார்க்கப்பட்டு இன்சுலினின் அளவு மாற்றப்படும்.

நான் எவ்வாறு இன்சுலின் மருந்தை பாதுகாப்பது?

 • இன்சுலின் மருந்தைவிட்டு குளிர்சாதனப்பெட்டியின் நடுப்பாகத்தில் வைக்கவேண்டும். ஒருபோதும் அதிகுளிரான பகுதியில் வைக்கக்கூடாது.
 • இன்சுலினை ஒரு குடுவையில் போட்டு குளிர் சாதனப்பெட்டியின் கதவில் வைக்கவேண்டும். வீட்டில் குளிர்சாதனப்பெட்டி இல்லாவிடில்,
 • கீழ் காட்டியவாறு மண்பானையில் இட்டு சூரிய ஒளிபடாத இடத்தில் வைக்கவேண்டும்.
 • சூரியஒளிபடவிடவேண்டாம் குளிர்பிரதேசத்தில் வாழ்ப வராயின் அறைவெப்பநிலையிலேயே வைக்கலாம்.
 • இன்சுலின் பேனா பாவிப்பதாயின் குளிர்சாதனப் பெட்டி தேவையில்லை

நான் பிரயாணிக்கும்போது இனிசுலினை எப்படி கொண்டு செல்வது?

கீழ் காட்டியவாறு ஐஸ்கட்டி உள்ள பாத்திரத்தில் கொண்டு செல்லுங்கள். ஒருபோதும் ஐஸ்கட்டியுடனோ அல்லது தண்ணீருடனோ இன்சுலின் தொடுகையுறக் கூடாது.

இன்சுலின் ஊசியை எவ்வாறு தெரிவுசெய்வது?

நீங்கள் 1m கொள்ளக் கூடிய syringe ஐ பாவிக்கலாம். இதில் 100 வரை அலகுகள் பிரிக்கப்பட்டிருக்கும். ஊசி 29G உள்ள ஊசி ஐ பாவிக்கலாம்.

புது ஊசியை எப்போது மாற்ற வேண்டும்?

ஊசியின்முனை மழுங்காவிடிலோ, இரத்தம் படா விடிலோ, அழுக்கு படியாவிடிலோ அதை ஒரு கிழமைக்கு பாவிக்கலாம்.

ஊசியில் இன்சுலின் மருந்தை எவ்வாறு எடுப்பது?

1 ml syringe 100 அலகுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதேபோல் 1 ml இன்சுலினில் 10ou காணப்படுகிறது. இதனால் 2ou இன்சுலின் தேவையின் Syringe இல் 20 அலகுகள் எடுத்தால் போதும்.

இன்சுலின் ஏற்ற முதல் நான் என்ன செய்ய வேண்டும்? 

 • குளிர்சாதனப்பெட்டியிலிருந்து இன்சுலினை எடுத்து 10-15 நிமிடம் அறைவெப்பநிலையில் வைக்க வேண்டும்.
 • கைகளை சவர்க்காரத்தால் கழுவவேண்டும்.
 • இன்சுலின் போடுமிடத்தையும் சவர்க்காரத்தால் கழுவவேண்டும்.
 • இன்சுலின் எடுக்க முதல் இன்சுலின் மருந்துக் குப்பின் மூடியை தொற்றுநீக்கியால் துடைக்க வேண்டும்.
 • கைகளின் இடையில் வைத்து மருந்துக்குப்பியை உருட்டவேண்டும். மேலும் கீழுமாக குலுக்கக் கூடாது.

நான் உடம்பின் எந்தெந்த பகுதிகளில் இன்சுலின் ஐ ஏற்றலாம்?

 • கையின் மேற்புற தோள்பட்டை பகுதி
 • வயிற்றில் தொப்புளை சுற்றிய பகுதி
 • தொடையின் மேற்பகுதி

நான் எவ்வாறு இன்சுலினை உடலில் ஏற்றுவது?

 • இன்சுலினை 45 இல் ஏற்றவேண்டும்.
 • தோலில் மடிப்பை ஏற்படுத்தினால் 90 பாகையில் இல் ஏற்றலாம்.
 • ஊசி மடிந்திருந்தாலோ அல்லது இரத்தம் பட்டி ருந்தாலோ பாவித்த ஊசியை திரும்பப்பாவிக்க வேண்டாம்.

இன்சுலினை தொடர்ந்து ஏற்றுவதால் தோலில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா?

சிலவேளைகளில் தோலில் திரட்டுகள் தோன்றும். ஆனால் இப்போது தயாரிக்கப்படும் இன்சுலினால் இப்பாதிப்பு ஏற்படுவதில்லை.

நான் இன்று காலையில் சப்பிடவில்லையெனில் இன் சுளினை போடலாமா?

இல்லை. இன்சுலினை, சாப்பிடும் போது அல்லது சப்பிட்ட பின்போ போட வேண்டும். சாப்பிடாமல் போடக் கூடாது.

இன்சுலின் போட்டபின் சிலர் தலைச்சுற்று வருகிறது என்கின்றனர். அது ஏன்?

சிலருக்கு இன்சுலினால் குருதியில் வெல்லம் சாதாரண அளவைவிட குறையும் போது தலைச்சுற்று, தலைவலி, நெஞ்சு படபடப்பு, சோர்வுத்தன்மை, உடல் வியர்த்தல் போன்றன ஏற்படுகின்றன.

இவ்வாறு வந்தால் என்ன செய்வது? 

 • வீட்டில் குருதிவெல்லம் அளக்கும் கருவியிருப்பின் அதன்மூலம் குருதிவெல்லம் குறைந்துள்ளதை உறுதிப்படுத்தலாம். அதன் பின் கொஞ்ச வெல்லத்தை எடுத்து மெல்லலாம்.
 • வீட்டில் கருவி இல்லாதிருப்பின், கொஞ்ச வெல்லத்தை எடுத்து மெல்லுங்கள். பின் உங்கள் வைத் தியரிடம் அறிவியுங்கள்.
 • இதனால் நீங்கள் வெளியே செல்லும்போது எப்போதும் இனிப்பு பொருளை கொண்டு செல்லுங்கள்.

Dr.க.சிவசுகந்தன்