அனைவருக்கும் ஒரேவகையான கவனிப்பை வழங்கும் பரந்த இதயத்தை….

அன்புமயமான ஆண்டவனே!
நோய், துயரம், வேதனை,இழப்பு என்பவற்றுடன் அல்லலுறும் மக்களை சந்திப்பதே எமது அன்றாட கடமையும் வாழ்க்கையும் ஆகிவிட்ட எமக்கு அவர்களை ஆதரவுடனர் பராமரிப்பதற்கு உமது அன்புமயமான இதயத்தை தந்தருளுவீர்களாக.

நாம் களைப்புற்றிருக்கும் பொழுதும் சலிப்படையாது துன்பப்படும் மனிதர்களின் துயர் துடைக்கும் மனவலிமையை வேண்டி நிற்கின்றோம். நோய், துயரம் காரணமாக தெரிந்தோ தெரியாமலோ நோயுற்றவர்கள் செய்யும் தவறுகளையும் வன்சொற்களையும் மன்னித்து அவர்கள் மீதும் அன்பு செலுத்தும் மனப்பக்குவத்தை தந்தருளும்.

நாம் கற்ற, பெற்ற அறிவுகள் அனைத்தையும் நோய், துன்பம், இழப்புகள் போன்றவற்றை குறைப்பதற்கும் தடுப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ளும் சக்தியை எமக்கு கொடும். உமது அன்புமயமான ஆட்சியில் இருக்கும் அனைவரையும் சமமாகக்கருதி அனைவருக்கும் ஒரேவகையான கவனிப்பை வழங்கும் பரந்த இதயத்தை எமக்கு தந்தருள்வீர்களாக.

மருத்துவக்குழு