முட்டை எனும் அருமருந்து – Dr. சி.சிவன்சுதன்

முட்டை வளர்ந்தவர்களுக்கு நல்லதல்ல, ஆபத்தான உணவு, கொலஸ் ரோலை அதிகரிக்கும் என்றெல்லாம் ஒரு தப்பான அபிப்பிராயம் நிலவி வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அனைத்து தரப்பினருக்கும்முட்டைபாதுகாப்பான உணவு மட்டுமல்ல அதிசிறந்த உணவு என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

முட்டை ஒப்பீட்டளவிலே மலிவான, இயற்கையான, அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொண்ட இரசாயனப்பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாத இலகுவில் சமிபாடடையக்கூடிய உணவாகும். இது பலநோய்களிலிருந்து மனிதனைப் பாதுகாக்கும் நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

இயற்கையான உணவு உணர்னும் கோழிகளிலிருந்து பெறப்படும் முட்டைகள் (ஊர்கோழிமுட்டை) இன்னும் விசேடமானவை.

முட்டைகளை அவித்தோ அல்லது பொரித்தோ உண்ணமுடியும். பச்சைமுட்டைகளையும், அரைஅவியல் முட்டைகளையும் உண்ணுவதைத் தவிர்த்தல் நல்லது.

இருதயநோய் மற்றும் கொலஸ் ரோல் நோய் உள்ளவர்களும் வாரத்திற்கு 3-4 முட்டைகள்வரை உண்ணுவது நல்லது. செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு அதிக விலையில் விற்பனையாகும் சத்துமா வகைகளுடன் ஒப்பிடும் பொழுது முட்டையை ஒரு மலிவான அருமருந்தாகக் கருதமுடியும்.

Dr. சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்