சிறுநீரக செயலிழப்பு (Renal Failure)உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணுவு பழக்முறை – Dr.கே.சிவசுகந்தன்

சிறுநீரக தொழிற்பாடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் கழிவுப் பொருட்கள் தேக்கமடைகின்றன. இதனால் நீங்கள் பொருத்தமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

நீங்கள் தேவையான அளவு மாப்பொருள், புரதம், இலிப்பிட்டு, விற்றமின்கள் மற்றும் கனியுப்புகளை உள்ளெடுக்க வேண்டும்.

புரதத்தை பொருத்தமான அளவு உள்ளெடுக்க வேண்டும். அதிகமான உப்புக்கள் அடங்கிய உணவுகளையும், பொட்டாசியம் அடங்கிய உணவுகளையும், பொளம்பேட் அடங்கிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

அளவாக பாவிக்க வேண்டிய உணவுகள்.
அதிக பொட்டாசியம் அடங்கிய உணவுகள் (High Potassium Diet)

 1. வாழைப்பழம்
 2. இளநீர்
 3. தோடம்பழம், எலுமிச்சம்பழம்
 4. பழப்பாகு, பழச்சாறு
 5. சொக்கலேட்
 6. மொல்டேட் உணவுகள்.
  (உடலில் அதிக பொட்டாசியம் இருப்பதாக வைத்தியர்கள் கூறினர் இவற்றை தவிர்ப்பது நல்லது)

அதிக உப்பு அடங்கிய உணவுகள் (High Salt Diet)

 1.  கருவாடு
 2. நொறுக்கு தீனிகள்

அதிக பொஸ்பேட்  அடங்கிய உணவுகள் (High Phosphate Diet)

 1. விலங்கு உணவுகள்
 2. காளான்
 3. பச்சை இலைகள்

அதிகம் புரதம் அடங்கிய உணவுகள் (High Protein Diet) 

 1. மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி
 2. பட்டர்
 3. ஈரல்
 4. இறால்

(இலங்கையில் சராசரியாக குறைந்தளவு புரதமே உள்ளெடுக்கப்படுகிறது. இதனால் வழமையான அளவு புரதத்தை உள்ளெடுக்க வேண்டும்)

பொருத்தமான உணவுகள்

 1. மரக்கறிகள்
 2. அரிசி
 3. குறைந்தளவு எண்ணெய் பாவனை
 4. பால், முட்டை
 5. சிறு அளவு கோழி இறைச்சி
 6. மீன்

எமது மனதில் யோசனை அதிகரிக்கும் போது ஏன் உடலில் பல பிரச்சினைகள் இருப்பதுபோல அறிகுறிகள் தோன்றுகிறது?

பல அறிகுறிகள் என்று நீங்கள் கருதுவது எதை?

உடம்பு வலி, கால் வலி, முதுகு நோ, நெஞ்சு நோ, தலையிடி, நித்திரையின்மை, உடற்சோர்வு…

நான் வருத்தமிருப்பதாக பொய் சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா?

இல்லை. உங்களுக்கு நோய் போல் தெரிவது முற்றிலும் உண்மை. ஆனால் இதற்கான அடிப்படை காரணம் மனம் களைப்பாகும்.

ஏன் இவ்வாறு ஏற்படுகிறது?

நாம் சும்மா இருக்கும் போதும் உடலில் பல செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இவையெல்லாம் எங்கள் மூளையால் உணரப் படாது. ஏனெனில் உணர்ச்சி ஏற்படுத்த தூண்டல் போதாது.

மனச்சோர்வு உள்ளவர்களுக்கு சிறிதளவு தூண்டலே போதுமானது இவ் உணர்சிகளை துண்டுவதற்கு.

மேலே படத்தை பாருங்கள். உடலில் பல்வேறுபட்ட அசைவுகள் உருவாக்கப்படுகின்றன. இவ் அசைவுகள் உணர்ச்சியை தூண்டுகின்றன. எனினும் எங்கள் உணரும் மட்டம் அதைவிட உயர்வாக உள்ளதால் இச் சிறுசிறு அசைவுகளை உணர முடிவதில்லை.

உதாரணமாக நாம் நடக்கும் போதும் இருக்கும் போதும் மூட்டுக்களில் சிறுசிறு வலிகள் உருவாக்கப்படும். ஆனால் இவை உணரப்படாது. நமது மனம் களைக்கும் போது எமது உணர்ச்சிகளை உள்வாங்கு வதற்கான மட்டம் குறைகிறது.

இதனால் உடலில் ஏற்படும் சிலசில மாற்றங்களும் நோய் அறிகுறிகளாக தெரியும். உதாரணமாக கால்நோ, மூட்டு நோ, கழுத்து நோ… அதாவது சாதாரணமாக உடலில் நடைபெறும் செயற்பாடுகளே அறிகுறிகளாக தெரிகின்றன.

Dr.கே.சிவசுகந்தன்