ஒருசிகரெட் மனிதனுக்குவிடுக்கும் இறுதி அறிவிப்பு – Dr.S.சிவன்சுதன்

நீ என்னை உறிஞ்சுகையில்உன் உயிருக்கு உலை மூட்டப்படுகிறது. எமக்கு கொள்ளிவைக்கத்துணிந்த உன் நெஞ்சு நான் எரியும் செந்தணலில் கருகும். உன் உதிரம் கொதித்து இரத்த நாளங்கள் மரத்துபோகும். உன் உடம்பு புற்றுநோய் பூக்களாகும். உனக்கும் ஒருநாள் கொள்ளி வைக்கப்படும் முடிவில் சேர்ந்தே சாம்பலாவோம் வா. நாளை சாம்பல் மேட்டில் சங்கமம் ஆகுவோம்.

Dr.S.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்