இரைப்பை அழற்சி (Gastritis) உங்களுக்கு இருக்கிறதா? – Dr.கே.சிவசுகந்தன்

இரைப்பை அழற்சி (Gastritis) என்பது என்ன?

இரப்பையில் அமிலத்தின் சுரப்பு  கூடுவதலோ அல்லது இரப்பை மேலணிக்கலங்கள் வேறு காரணங்களால் பாதிக்கப்படுவதால் இது ஏற்படுகிறது.
இரைப்பை அழற்சி (Gastritis) வந்ததற்கான அறிகுறிகள் என்ன?

 • வயிறு எரிவு
 • நெஞ்சுஎரிதல்
 • அடிக்கடி ஏவறை ஏற்படல்
 • சாப்பிட்டபின் வயிறுவீங்குதல்
 • வயிறுகுமட்டல்,வாந்திஉருவாதல்
 • சமிபாடடையாத்தன்மை உருவாதல்
 • சிலவேளைகளில் இரத்தவாந்தி எடுத்தல், மலம் கறுப்பாக போதல்

இது உருவாக காரணங்கள் என்ன?

 • சரியான நேரத்துக்குஉணவு எடுக்காமல் விடல்
 • சிலமருந்துகள்- அஸ்பிரின்.அலன்றோனட்,
 • மனஅழுத்தம்
 • மதுபானம் அருந்தல்
 • சிகரட் குடித்தல்
 • அதிக உடல் நிறை
 • சிலவேளைகளில் புற்றுநோய்களும் இவ் அறி குறியை கொண்டிருக்கும்.

நான் இதைகுறைக்க என்ன செய்யவேண்டும்?

 • சரியான நேரத்துக்கு உணவு உண்ண வேண்டும்.
 • கொழுப்புணவுகளை குறைவாக உள்ளெடுக்க வேண்டும்.
 • அதிகம் உறைப்பான, அதிகஅமிலத்தன்மையுள்ள உணவுகளை குறைவாக உண்ணவேண்டும்.
 • மதுபானம், சிகரட் பாவனையை நிறுத்த வேண்டும்.
 • சோடா போன்ற காபநேற்றியபதார்த்தங்களை குறைக்கவேண்டும்
 • அஸ்பிரின் போன்ற மாத்திரைகளை பாவிப்பதை நிறுத்தவேண்டும்.
 • உடல் நிறையை குறைக்கவேண்டும்.

இதற்கு மருந்து எடுக்காவிடில் வேறு பிரச்சினை கள் ஏதும் ஏற்படுமா?

 •  இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குருதி வெளி யேறுமாயின் குருதிச்சோகை நோய் ஏற்படும்.
 • சடுதியாகவும் அதிக குருதி வெளியேறலாம்.
 • பிற்காலத்தில் புற்றுநோயாகவும் மாறலாம்.
 • இரைப்பையில் அடைப்புக்களை ஏற்படுத்தலாம். இதனால் தொடர்ச்சியாக வாந்தி ஏற்படும்.

இதற்கு மருந்துகள் உண்டா?

ஆம். உங்களுக்கு பொருத்தமான மருந்துகளை வைத்தியர் வழங்குவார். அவர் கூறியவாறு மருந்தை தொடர்ந்து எடுக்கவேண்டும்.
இவ்வருத்தத்திற்கு கமராவிட்டு பார்க்கிறார்களே ஏன்?

 • இரைப்பை அழற்சிதான் என்பதை உறுதிசெய்வதற்கு
 • 40 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு இரப்பை புற்று நோய் இல்லை என்பதை உறுதி செய்துகொள்வதற்கு
 • தேவையேற்படின் மாதிரிப் பொருளை எடுத்து பரி சோதிப்பதற்கு.

உங்களுக்கு? Endoscopy செய்யவேண்டுமென வைத்தியர் கூறினாரா?
Endoscopy என்றால் என்ன?
இது மெல்லியகுழாய் வடிவான கமரா மூலம் உங்கள் சமிபாட்டுதொகுதியின் அங்கங்களான களம், இரப்பை, முண்சிறுகுடலின் பாகம் என்பவற்றை சோதிப்பதாகும்.
இது யாருக்கு செய்யப்பட வேண்டும்?

 •  குருதிச்சோகைநோய் உள்ளவர்களுக்கு மருந்து கொடுப்பதன் மூலம் குருதியினளவு கூடாவிடின்.
 • வயிற்றுபொருமல், வயிற்று நோ. சமியாத்தன்மை உள்ளவர்களுக்கு மருந்துமூலம் குறையாவிடின்
 • உணவு விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள்

இது செய்வதற்கு நான் எவ்வாறு வைத்தியசாலைக்கு வர வேண்டும்?

 • இதற்கு அதேநாளிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படலாம்.
 • முதல் ஆறுமணித்தியாலங்களுக்கு உணவு உள்ளெடுக்க கூடாது.
 • முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு நீராகாரம் உள்ளெடுக்க கூடாது.
 •  வெண்ணிற ஆடையும் கொண்டுவருவது நன்று.

இது செய்யும் படிமுறைகள் என்ன?

 • நீங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைத்தியர் உங்களை பரிசோதிப்பார். செய்வதில் ஏதும் பிரச்சினைகள் உண்டோ என்பதையும் ஆராய்வர்.
 • பின் இது செய்யும் முறை. செய்வதற்கான காரணம், செய்வதிலுள்ள அனுகூலம், பிரதிகூலம் என்பவற்றை விளங்கப்படுத்துவார்.
 •  பின்னர் இப்பரிசோதனை செய்வதற்கான எழுத்து மூல அனுமதி பெறப்படும்.
 • வெண்ணிற ஆடை மாற்றப்படும். மருந்து ஏற்று வதற்கான ஊசி போடப்படும்.
 • குழாய்ப் பரிசோதனை செய்யும் அறைக்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.
 • அங்கு வைத்தியர் உங்களை வலப்புறமாக படுக்க சொல்வார். உங்கள் உடல் நிலையை கண்காணிக்க தேவையான உபகரணங்கள் இணைக்கப்படும்.
 • பின்னர்வாயில் விறைப்புத்தன்மையை ஏற்படுத்தி ஓங்காளத் தன்மையை குறைக்க மருந்து விசிறப்படும்.
 • வாயினுடாக செலுத்தப்படும் கமராவை நீங்கள் கடிக்காமலிருக்க உபகரணம் பொருத்தப்படும். பின் அதனுடு மெல்லியகுழாய் வடிவக் கமராசெலுத்தப்படும்.
 •  வைத்தியர் கூறும்போதுநீங்கள் விழுங்கிகொடுக்க வேண்டும்.
 • குழாய் வயிற்றினுள் இருக்கும் போது வயிற்றில் பொருமல் தன்மை ஏற்படும். நோ ஏற்படும். குழாயை எடுத்ததும் இது குறைந்துவிடும்.

இது செய்வதால் ஏதும் பிரச்சினைகள் ஏற்படுமா?

 • பொதுவாக பிரச்சினைகள் ஏற்படுவதில்லை
 • இருதயவருத்தம் உள்ளவர்களுக்கு சிலவேளை களில், இதயதொழிற்பாட்டில் சடுதியானமாற்றங்கள் ஏற்படலாம்.
 • ஓங்காளிப்பு வாந்தி போன்றன ஏற்படலாம்.
 • சிலவேளைகளில் குடலில் இரத்த பெருக்கு ஏற்படலாம் (பொதுவாக பரிசோதனைக்காக குடல் மாதிரி எடுக்கப்படும் போது).

குழாய் விட்டுப் பார்த்த பின் நான் நீர் / உணவு அருந்தலாமா?

 • இரண்டு மணித்தியாலங்களுக்கு எதுவும் உள்ளெடுக்க கூடாது.
 • வாயில் விறைப்புதன்மைகுறையும் வரை சூடான மற்றும் காரமான உணவுகளை பாவிக்கக்கூடாது.

Dr.கே.சிவசுகந்தன்