மயக்க மருந்து கொடுத்து சத்திர சிகிச்சை…Dr.க.சிவசுகந்தன்

இவ் பொது மயக்கமருந்தை யார் கொடுப்பார்?

 • பொது மயக்க மருந்து கொடுப்பதற்கு விசேட வைத்தியர் உள்ளார்.
 • அவர் உங்களுக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு முதல் நாள் உங்கள் உடல் நிலையை பரிசோதிப்பார்.
 • பரிசோதித்த பின்னர் உங்களுக்கு பொது மயக்க மருந்து கொடுக்கலாமா அல்லது கொடுக்க முடியாதா என்பது பற்றி உங்களுடன் கலந்தாலோசிப்பர்.
 • அவ்வாறு உங்களுக்கு பொது மயக்க மருந்து கொடுக்க முடியாவிடில் உங்களுக்கு சத்திரசிகிச்சை செய் யும் பகுதியில் உணர்ச்சி இல்லாமல் செய்யக்கூடிய வேறு வகையான முறைகள் பற்றியும் கலந்தாலோசிப்பர்.
 •  அத்துடன் அவர் சத்திரசிகிச்சை நிபுணருடனும் இதுபற்றி கலந்தாலோசிப்பர்.
 • இவ்வைத்தியரே நீங்கள் மயக்க நிலைக்கு போனது முதல் மயக்கம் விட்டு எழும்பும் வரை உங்கள் உடல் நிலையை பேணுவார்.

என்ன வழிகளில் மயக்கம் கொடுக்கப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது?

பொது மயக்கமருந்து முறை

 • பொது மயக்கமருந்து முறையில் மருந்தானது உங்கள் குருதிக்குழாயில் ஏற்றப்படுகிறது. அல்லது சுவாசம் மூலம் வழங்கப்படுகிறது.
 •  இதன் பின் நீங்கள் மயக்க நிலைக்கு சென்று விடுவீர்கள். உங்களுக்கு வலி உணரப்படாது.

பகுதியாக விறைப்பு ஏற்படுத்தும் முறை

 • இதன்போது நாரி முள்லென்பில் விறைப்பு ஊசி ஏற்றப்படும். இதன் பின் நாரிக்கு கீழான பகுதி விறைத்து காணப்படும். தொடுகை உணர்வு இருக்கும். அனால் நோ தெரியாது. நீங்கள் விழிப்புடனே இருப்பீர்கள்.
 •  கால்/கை/உடலின் சிறு பாகங்களில் சத்திர சிகிச்சை செய்வதாயின் அந்த பகுதியிலேயே விறைப்பு ஊசி ஏற்றப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்படும்.

பொது மயக்க மருந்து கொடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

தற்போதைய வளர்ச்சியடைந்த வைத்திய துறையில் பொதுமயக்கமானது பாதுகாப்பானதாகும். பக்கவிளைவுகள் ஏற்படினும் அவை தற்காலிகமானவை. சில சமயங்களி லேயே இவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இப்பிரச்சனைகள் சில காரணிகளில் தங்கியிருக்கும்.

 • உங்களுக்கு உள்ள வேறு நோய்கள்- உதாரணமாக நீரிழிவு நோய், இருதய நோய், சிறுநீரக நோய்கள்…
 •  உங்களுக்கு செய்யும் சத்திரசிகிச்சை
 • சத்திரசிகிச்சை செய்ய எடுக்கும் நேரம்
 •  உங்களுக்கு செய்யும் சத்திரசிகிச்சை திட்டமிட்டு செய்யப்படுகிறதா அல்லது அவசரமாக செய்யப்படுகிறதா என்பதில்

மிகவும் பொதுவான பக்க விளைவுகள்

 • வயிற்று குமட்டல், சத்தி
 • தலையிடி
 • ஊசிமருந்து ஏற்றிய இடங்களில் வலி
 • தொண்டை வறட்சி
 • கண் மங்கலாக தெரிதல்
 • சலம் விடுவதில் ஏற்படும் பிரச்சனை

இவை யாவும் தற்காலிகமானவையே.

சாத்தியத்தன்மை குறைந்த பக்கவிளைவுகளாவன

 • உடல் வலி
 • உடல் சக்தியற்று இருத்தல்
 • சில நரம்புகளில் விறைப்பு தன்மை காணப்படல்

மிகவும் சாத்தியத்தன்மை குறைந்த பக்க விளைவுகள்

 •  உங்களது பல்லில் காயம் ஏற்படல்
 • உங்கள் குரல் நாண் பாதிக்கப்படுவதால் தற்க்காலிக மாக உங்கள் குரலில் மாற்றம் ஏற்படலாம்.
 • மருந்துகளுக்கு ஒவ்வாமை தன்மை ஏற்படலாம்
 • வலிப்பு வரலாம்
 • நுரையீரல் நோய்தொற்றுக்கள் ஏற்படலாம்.
 • உங்களுக்கு ஏற்கனவே உள்ள வருத்தங்கள் தீவிரமடையலாம்.

மிக மிக அரிதாக சில வேளைகளில் மரணம் சம்பவிக்கலாம்.

 • கடுமையான ஒவ்வாமை
 • உடலின் வெப்பநிலை சடுதியாக அதிகரித்தல்
 • மாரடைப்பு
 • பாரிசவாதம்
 • நுரையீரல் கிருமித்தொற்று

இவை ஏற்படுவதற்க்கான சாத்தியம் கூடுதலாக உளளவரகள்

 •  வயது முதிர்ந்தவர்களிலும், உடற்பருமனானவர் களிலும், வேறு நோய்கள் உள்ளவர்களிலும் (நீரிழிவு, உயர்குருதியமுக்கம், மாரடைப்பு…)

பகுதியாக மயக்கம் கொடுப்பதில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

மேற்கூறிய பிரச்சனைகளும் ஏற்ப்படலாம். இதைவிட

 • முதுகு நோ
 • தலைவலி
 • இரு கால்களிலும் விறைப்பு (குறைந்தது 6 மணித்தியாலங்களுக்கு)
 • சலம் விடுவதில் ஏற்படும் பிரச்சனை

நான் எவ்வாறு சத்திரசிகிச்சைக்கு தயாராக வேண்டும்?

 • உடல் நிறை அதிகமாக இருப்பின் நிறையை குறைப்பது நல்லது
 • புகைப்பிடிப்பதை நிறுத்துவது நல்லது. (குறைந்தது 6 கிழமை)
 • மதுபானம் அருந்துவதை குறைப்பது நல்லது. 24 மணித்தியாலங்களுக்கு மது அருந்தக்கூடாது.
 • நீங்கள் ஏதும் மருந்துகளை பாவிப்பதாயின் அதை வைத்தியரிடம் முதலே அறிவியுங்கள். ஏனெனில் சில மருந்துகளை நிறுத்தவேண்டிய தேவை ஏற்படும். உங் களுக்கு உள்ள நோய்கள் பற்றியும் வைத்தியரிடம் அறி வியுங்கள்.

பொதுமயக்க மருந்து கொடுத்து 24 மணித்தியாலங்கள் வரை உங்கள் நிதானத்தனர்மை குறைவாக காணப்படும். இதனால் நீங்கள் பினர்வருவன வற்றை செய்யக்கூடாது

 • நீங்கள் வாகனம் செலுத்தக்கூடாது
 • இயந்திரங்களை கையாளக்கூடாது முக்கியமான பத்திரங்களில் கையொப்ப்ப மிடக்கூடாது.
 • மது அருந்தவோ அல்லது சிகரட் பிடிக்கவோ கூடாது.