நீரிழிவு நோய் உள்ளவர்கள் தமது கால்களை பராமரிப்பது எப்படி? (Diabetic Foot Care)- Dr. க. சிவசுகந்தன்

 1.  குருதியில் குளுக்கோளமின் அளவைகட்டுப் பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
 2. உங்களது பாதத்தை தினமும் பரிசோதிக்க வேண்டும்.
  • தினமும் உங்கள் பாதத்தில் ஏதும் புண்கள், பொக்களங்கள், வீக்கங்கள், விரல்களிடையேபுண் கள் இருக்கிறதா என்பதை பரிசோதியுங்கள்.
  • அடிப்பாதத்தை பார்ப்பதில் சிரமம் ஏற்படின் கண்ணாடியை பயன்படுத்தலாம்.
  • உங்கள் பார்வையில் மங்கல் தன்மை, இருப்பின் உங்கள் குடும்பத்தவரின் உதவியுடன் தினமும் பரிசோதியுங்கள்.
  • ஏதும் காயங்கள் தென்படின் வைத்தியரின் உதவியை நாடுவது நல்லது. சிறுகாயமாயின் தொற்றுநீக்கியை பாவித்து காயத்தை துடைக்க வேண்டும்.
  • விரல் நுனிகள் கருமையாக மாறுகின்றனவா என்பதை அவதானியுங்கள்.
 3. தினமும் உங்கள் கால்களை கழுவ வேண்டும்.
  • உங்கள் பாதங்களை தினமும் இளம் சூட்டு நீரினால் கழுவவும். பின்னர் நன்றாக உலர விடுங்கள். நக இறைகளைகழுவுவது மிகமுக்கியம்.
 4. எப்போதும் தோலைமென்மையாக வைத்திருங்கள்.
  • இதற்காக தோலை ஈரலிப்பாக பேணக் கூடிய மருந்துகளை பூசலாம். ஆனால் நக இறை களுக்கு பூசலாகாது.
 5. எப்போதும் உங்கள் கால்நகங்களை வெட்டிவைத்திருங்கள்.
 6. ஒருபோதும்வெறும் காலுடன் நடக்காதீர் கள். பாதணிகள் அணியும் போது இறுக்க மற்றதாக அணியுங்கள்.
 7. நீரிழிவு நோயாளிகளின் பாதங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள விசேடகாலணிகளை பாவியுங்கள். இப்பாதணிகளை வாங்கும் போது மாலை வேளையில் வாங்குங்கள். ஏனெனில் நீரிழிவு நோயாளர்களுக்கு மாலை வேளையில்கால்வீக்கம் ஏற்படும், காலையில் உள்ளங்காலின் அளவுக்கு பாதணிவாங்கினால் அதை மாலையில் பாவிப்பதில் சிரமம் ஏற்படும்.

காலில் ஏற்படும் கிருமித்தொற்று (CELLULITISO’)

Cellulitis என்றால் என்ன?

இது தோலுக்கு கீழாக உள்ள இழையங்களில் ஏற்படும் கிருமித்தொற்றாகும்

இது ஏன் ஏற்படுகிறது?

சாதாரணமாக எமது தோலின் மேற்பரப்பில்லுள்ள கிருமிகள் எமது தோலில் ஏதும் காயம் ஏற் படும் போது அதனுடாக உள்நுழைகின்றன.

(உதாரணமாகதோல் புண்கள், வெட்டுகாயங்கள்….). உள்நுழைந்த கிருமிகள் அந்நேரத்தில் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படின் விரைவாக பெருக்கமடைந்து உடல் இழையங்களை பாதிக்கின்றன. (உதாரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு).

இது யாருக்கு அதிகம் ஏற்படுகிறது?

 • நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில் இல்லாவிடில்
 • varicose நாளங்கள் வீங்கியுள்ளவர்கள் கால்களிலுள்ள நிணநீர் முடிச்சுக்கள் செயளிலந்தவர்கள்
 • எக்சிமாபோன்றதோல் வியாதிகள் உள்ளவர்கள்

இதற்கு எவ்வகையான நோயறிகுறிகள் ஏற்படும்? 

 • அவ்விடம் வீக்கமடையும்
 • செந்நிறமாகமாறும்
 • சூடாக இருக்கும்
 • வலிஏற்படும்
 • சிலருக்குகாய்ச்சல் ஏற்படும்
 • பசியின்மை
 • உடம்பில் அசதித்தன்மை

இதற்கு முறையாகமருந்து எடுக்காவிடில் என்ன நடக்கும்?

 • குருதிக்குள் நோய்க்கிருமி பரவி உடல் பூராகவும் பரவலடையும்
 • சிதல் கட்டி உருவாகும்
 • கிருமிதசை மற்றும் எலும்பை பதிக்கலாம். இதனால் கிருமியை உடலிலிருந்து அகற்ற நீண்ட நாட்கள் எடுக்கும்
 • இது முகத்தில் ஏற்படின் மூளைக்கு கூட பரவலாம்.
 • இது முறையாக மற்றப்படவிடின் அடிக்கடி ஏற்படும்

இதற்க்கு எவ்வகையான மருத்துவமுறை வழங்கப்படுகிறது?

 • நோய்க்கிருமிக்குஎதிரானமருந்துகள். (antibiotics). இது குறைந்தது 3-5 நாட்களுக்கு வழங்கப்படவேண்டும்.
 •  நோய்த் தொற்று ஏற்பட்ட பகுதியை எப்போதும் உயர்த்தியே வைத்திருக்கவேண்டும். இதனால் அவ்விடத்தில் சேரும் நீர் புவிஈர்ப்பின் கீழ் உடனடியாக வடிவதால் கிருமித்தொற்றுவிரைவில் குறைகிறது.
 • நோக்கானமருந்துகள்
 • காலை உலரவிடாமல் பாதுகாக்கும் கிறீம்கள்
 • இதைவிடகாலில் புண் இருப்பின் அதை தினமும் மருந்திட்டு துப்பரவாக வைத்திருக்க வேண்டும்.

இதற்க்குஎத்தனைநாட்கள் நான் வைத்திய சாலையில் தங்கவேண்டும்?

இது உங்கள் நோயின் தீவிரத்தைபொறுத்தது. குறைந்தது 3-5 நாட்கள் இருக்கவேண்டும்.

எவ்வாறுநான் இது மீண்டும் ஏற்ட்படாமல் தடுப்பது?

 • குருதியில் வெல்லத்தின் அளவைசரியாக பேனல்
 • varicose நாளங்களுக்கு சத்திரசிகிச்சை செய்தல்
 • உடலில் காயங்கள் ஏற்படின் காயத்தைவடிவாககழுவி கிருமித்தொற்று நீக்கிகளை
  இட்டு மருந்துகட்டல்
 • கால்களை விராண்டுவதை தவிர்த்தல்.
 • கைநகங்களை வெட்டல்

 

Dr. க. சிவசுகந்தன்
யாழ்.போதனாவைத்தியசாலை