அகஞ்சுரக்கும் தொகுதியல் என்றால் என்ன? மருத்துவர். M. அரவிந்தன்.

அகஞ்சுரக்கும் தொகுதியல் (Endocrinology) என்றால் என்ன?
1. அகஞ்சுரக்கும் தொகுதியியல் என்றால் என்ன என்பது பற்றிச் சிறிது விரிவாகக் கூறுங்கள்?

எமது உடலில் பல வகையான ஹோர்மோன்களைச் சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. இவ்வாறான ஹோர் மோன்களைச் சுரக்கும் சுரப்பிகள் ஒட்டுமொத்தமாக அகஞ்சுரக்கும் தொகுதி யென அழைக்கப்படு கின்றது. இந்த அகஞ் சுரக்கும் தொகுதி சம்பந்தமான நோய்கள் தொடர்பாக ஆராயும் பிரிவானது அகஞ்சுரக்கும் தொகுதியியல் (Endocrinology) என அழைக்கப்படுகின்றது.

இது பொது மருத்துவத்தின (G e n e r a l medicine) பிரதானமான ஒரு பிரிவாகக் கருதப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் பொது மருத்துவமானது மேலும் பல உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Hormones

2. ஹோர்மோன் சுரப்புக்கள் தொடர்பாக ஏற்படும்நோய்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றி விளக்கிக் கூறுங்கள்?

எமது உடலில் பல வகை யான ஹோர்மோன் சுரப்புக்கள் (Endocrine glands) உள்ளன. சதையியில் ஏற்படும் இன்சுலின் சுரப்புக் குறை பாடு, எதிர்ப்பினால் நீரிழிவானது ஏற்படுகின்றது. இதேபோல கழுத்துப்பகுதியிலுள்ள தைரொயிட் சுரப்பியில் ஏற்படும் பிரச்சினைகளால் தைரொயிட்குறைபாட்டுநிலை மற்றும் தைரொயிட் மிகைச்சுரப்பு நிலை என்பவை ஏற்படுகின்றன. மூளையினுள் உள்ள கபச் சுரப்பியே பிரதானமான ஹோர்மோன் சுரப்பியாகும். இதுவே உடலிலுள்ள அனேகமான ஹோர்மோன் சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகின்றது கபச்சுரப்பியில் (Pituitary gland) அல்லது அதற்கு அருகிலேற்படும் கட்டிகளால் அல்லது கபச்சுரப்பிதனது செயற்பாட்டை இழப்பதால், பல வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக கபச்சுரப்பியில் ஏற்படும் கட்டியினால் அல்லது அந்தக் கட்டியானது அருகிலுள்ள பகுதிகளைத் தொடுவதனால் (prolactin) என்ற ஹோர்மோன்சுரப்பு உடலில் அதிகரிக்கின்றது. இதனால் பெண்களில் மாதவிடாய் பிரச்சினைகள் குழந்தைப்பேறு பாதிப்படைதல், மார்பகக் காம் பினுடாகப் பால் வடிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதேபோல ஆண்களிலும்பாலியல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட நேரிடுகிறது.

இவ்வாறான கட்டிகளால் தலைவலி, வாந்தி மற்றும் பார்வைக் குறைபாடுகள் போன்றவையும் ஏற்படுகின்றன. சில வகையான கபச் சுரப்பிக் கட்டிகள் ஹோர்மோன்களை மேலதிகமாகச் சுரக்கின்றன. இதனால் பல வகையான ஹோர்மோன் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக உயர ஹோர்மோனானது அதிகமாகச் சுரக்கும்போது உடல் அவயவங்களின் பருமன் அதிகரித்து Acromegaly என்ற நோய் ஏற்படுகின்றது. கபச் சுரப்பியின் தொழிற்பாடு குறையும்போது அல்லது செயலிழக்கும்போது உடலில் பல வகையான ஹோர்மோன் குறைபாட்டு நோய்கள் ஏற்படுகின்றன. காலம் தாழ்த்திப் பூப்படைதல்(Delayed puberty) அல்லது குறைந்த வயதில் பூப்படைதல் என்பவையும் ஹோர்மோன் தொடர்பான பிரச்சினைகளேயாகும். எமது உடலிலுள்ள கல்சியம் . போன்ற பல வகையான கனி யுப்புக்களின் தொழிற்பாட்டைக் கட்டுப்படுத்துவதும் ஹோர்மோன்களே. எலும்புதேயும் நோய் (Osteoporosis) என்பதும் அகஞ்சுரக்கும் தொகுதியியலில் அடங்கும் ஒரு பிரதான பிரச்சினையாகும். சிறு பிள்ளைகள் உயரம் குறைவாக இருத்தலுக்கு உயர ஹோர்மோன் (Growth hormone) குறைபாடும் ஒரு காரணமாகும். இதனை நாம் கண்டறிந்தால் ஹோர்மோன் சிகிச்சையின் மூலம் சாதாரண உயரத்தை இந்தச் சிறுவர் கள் அடைய முடியும்.

இன்றைய காலகட்டத்தில் உடற் பருமன் அதிகரிப்பதால் பல வகையான நோய்கள் ஏற்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. பல பெண்கள் மாத விடாய்ப் பிரச்சினைகளோடு உடலில் முடி வளர்தல் போன்றவற்றுக்கும் உள்ளாகின்றார்கள். சூலகத்தில் ஏற்படும் சிறுகட்டிகள் (Polycystic ovarian syndrome) இதற்குப் பிரதானமானதொரு காரண மாகும்.

3. இவ்வாறான ஹோர்மோன் பிரச்சினைகளைக் கண்டறிந்து கொள்வதற்கான வழிமுறை களைப் பற்றிக் கூறுங்கள்?

ஹோர்மோன் பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது என்று நோயாளியொருவரோ அல்லது அவரது குடும்ப வைத்தியரோ சந்தேகிக்கும் இடத்து ஹோர்மோன்கள் தொடர்பான சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைத்தல் மிகச் சிறந்ததாகும். ஹோர்மோன் தொடர்பான சுரப்பாக நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அவற்றை இலகுவாகத் தீர்த்துக்கொள்ள முடியும்.

4. இன்றைய கால கட்டத்தில் ஹோர்மோன் தொடர்பான பிரச்சினைகள் அதிகளவில் கண்டறியப்பட்டு வருகின்றன. இதற் கானகாரணங்களைப் பற்றிக் கூறுங்கள்?

முதலாவதாக, மக்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வு சிறிது சிறிதாக ஏற்பட்டு வருகின்றது. இவ் வாறான நோய்களுக்கு சிகிச்சைகள் உள்ளன என்றும் இவற்றைச் சிகிச்சைகள் மூலம் குணமாக்க முடியுமென்றும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

நீரிழிவு மற்றும் பல வகையான ஹோர் மோன் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு உடற் பருமன் அதிகரித்தலும் ஒரு பிரதான காரணமாகும். எமது இன்றைய பிழையான மேலைத்தேய ( Western) துரித உணவு (Fastfood) பழக்கவழக்கங்களும் உடற் பயிற்சியற்ற ( Sedentary) வாழ்க்கை முறையும் இதற்கான காரணங்களாகும்.

5. ஹேர்மோன் தொடர்பான பிரச்சினைகளுக்கு எமது பிரதேச மக்கள் எவ்வாறு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அகஞ்சுரக்கும் தொகுதியியல் சிகிச்சை நிலையமானது யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு நிலையத்தில் மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த மக்களுக்கான ஒரேயொரு ஹோர்மோன் சிகிச்சை நிலையம் இதுவேயாகும். ஹோர்மோன் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நோய்கள் உள்ளவர்கள் இங்கு வருகை தருவதன் மூலம் சிறப்பான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மருத்துவர். M. அரவிந்தன்.
நீரிழிவு மற்றும் அகஞ்சுரக்கும் தொகுதியியல்
சிறப்பு வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை