உயர் குருதி அமுக்கம் (Hypertension)-Dr.T.பேரானந்தராசா

Stethoscope, blood pressure gauge and hypertension headline

சாதாரணமான ஒருவரின் குருதியமுக்கத்தின் அளவு 120/80 ஆகும். குருதியமுக்கம் இரு எண் பெறுமானத்தில் குறிப்பிடப் படுகின்றது. மேல் உள்ள எண் பெறுமானம் (Systolic) அதாவது குருதிக் குழாய்களில் உள்ள அமுக்கமே இதயம் சுருங்கும் போதும் கீழ் உள்ள எண் பெறுமானம் (Diastolic) அதாவது குருதிக் குழாய்களில் உள்ள அமுக்கம் இருதயம் தளர்ச்சியடையும் போதும் ஆகும்.

உயர் குருதியமுக்கம் என்றால் ஒருவரின் இரத்த நாடிகளில் உள்ள குருதியமுக்கம் 140/90 என்ற பெறுமானத்திலும் அதிகமாவதாகும். எனவே ஒவ்வொருவரும் குறிப்பாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தங்கள் குருதியமுக்கத்தை வருடத்தில் ஒரு தடவையாவது அளந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.

குருதியமுக்கம் 140/90 மேல் இருப்பின் வைத்தியரிடம் சென்று மேலதிக சோதனைகள் ,அவற்றிக்குரிய மருந்துகள் பற்றி கலந்தாலோசித்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வைத்தியரிடம் ஒழுங்காகச் சென்று பரிசோதிக்க வேண்டும்.

குருதியமுக்கம் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடின் பல பாதகமான விளைவுகள் ஏற்பட்டு சடுதியான மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குருதியமுக்கம் ஏன் ஏற்படுகின்றது, அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது அதைக்கட்டுப்படுத்தாவிடில் ஏற்படும் பாரதுாரமான விளைவுகள் பற்றி நாங்கள் அனை வரும் அறிந்து வைத்துக் கொள்வதுடன் அவற்றை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

இதையே நான் இக்கட்டுரையில் கேள்வி பதில் வடிவில் உங்களுக்கு கூற விரும்புகிறேன்.

1. எவ்வளவு பேர்கள் உயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? (How common is high blood pressure?) எமது நாட்டில் 20-25%மான மக்கள் உயர் குருதிய முக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தரவுகள் கூறுகின்றன.

2. உயர் குருதியமுக்கம் எப்படியானவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம்?

 • அதிகூடிய நிறையுடையவர்கள் பொதுவாக ஆண்களில் உடல் திணிவு எண் 25இற்கு மேலும் (BMI>25) பெண்களில் (BMI>23) உடையவர்களுக்கு
 • அதிக உப்புச்சேர்த்த உணவு உட்கொள்வோர்கள் .
 • போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் உட்கொள்ளாத வர்கள்.
 • போதுமான அளவு உடற்பயிற்சி செய்யாதவர்கள்.
 • அதிகளவு கொழுப்பு உணவு அருந்துபவர்கள்.
 • அதிகளவு கோப்பி அல்லது மதுபானம் உட்கொள்பவர்கள்.

3.யார், யார் தங்களது குருதியமுக்கத்தை அளக்க வேண்டியவர்கள்?

 • வயது வந்தவர்கள் (40 வயதிற்கு மேற்பட்டவர்கள்)
 • நீரிழிவு உள்ளவர்கள்.
 • பரம்பரையில் உயர்குருதியமுக்கம் உள்ளவர்கள்
 • (30 வயதிற்கு மேல்) அதிக உடல் பருமன் உடையவர்கள்
 • புகைப்பிடிப்பவர்கள்.
 • மதுபானம் அருந்துபவர்கள்.
 • உடற்பயிற்சி செய்யாதவர்கள்.

4. உயர் குருதியமுக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாதவிடத்து இதனால் என்ன பிரச்சினைகள் ஏற்படும்?

சாதாரணமாக குருதியமுக்கம் உள்ளவர்களுக்கு குணம் குறிகள் பொதுவாக ஆரம்ப நிலையில் தெரிவதில்லை. ஆனால் குருதியமுக்கத்தை நாம் மேலே கூறியவாறு உள்ளவர்களுக்கு அளந்து பார்க்காமல் இருப்பின் அவர்களுக்கு சடுதியாக பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றது.

அவையாவான

 1.  மாரடைப்பு (Heart attack)/Angina)
 2. பாரிசவாதம் (stroke)
 3. சிறுநீரகங்கள் பழுதடைதல்
 4. இதயம்பலவீனமாதல் (Heart failure)
 5. கால்களுக்கு செல்லும் இரத்த நாடிகள் தடிப் படைந்து நடக்கும் போது கால்களில் நோ ஏற்படல் (Intermittent claudication)

எனவே நாங்கள் எங்கள் குருதியமுக்கத்தை 35-40 வயதின் பின் குறைந்தது வருடம் ஒரு தடவையாவது அளக்க வேண்டும். குருதியமுக்கம் 140/90 மேல் வரும் போது உங்களுடைய வைத்தியரிடம் சென்று அதற்கான சிகிச்சைகளைப் பெற வேண்டும். சிகிச்சையின் பின் உங்கள் குருதி அமுக்கம் 140/90 குறைவாக வந்த பின்னும் தொடர்ந்து உங்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உங்கள் மருந்துகள் குறித்தும், குருதிப் பரிசோதனைகள் ஒழுங்காக செய்தும் , மருந்துகளை பாவிக்கும் அளவு பற்றியும் அறிந்து நடக்க வேண்டும். ஒரு போதும் எங்கள் குருதியமுக்கம் (நோமல்) குறைந்து விட்டது என்று மருந்து களையோ உணவுக்கட்டுப்பாட்டுக்களையோ உடல் பயிற்சி களையோ நிறுத்தக் கூடாது. இதனால் பல பின்விளைவுகளுக்கு ஆளாக நேரிடும்.

05. Risk factors for cardiovascular diseases குருதியமுக்கம், இருதய வருத்தம், குருதிக்குழாய்களில் ஏற்படும் தடைகள் (Athero Sclerosis) போன்றவற்றுக்கான அபாயகரமான காரணிகள் எவை என்று பார்ப்போம்.

 1. Life style risk factors that can be prevented or changed (வாழ்க்கை முறையில் ஏற்படும் பயங்கரமான காரணிகள்)
  • புகைத்தல் (Smoking)
  • உடற்பயிற்சியின்மை (lack of physical activity sedentry life style)
  • உடல் பருமன் அதிகரிப்பு (obesity)
  • Unhealthy diet ( உப்பு இனிப்பு கொழுப்பு கூடிய உணவுகள்)
  • மதுபானம் (alcohol)
 2. Treatable or partly tretable rick factors (சிகிச்சை அளிக்கக் கூடிய பாதகமான காரணிகள்)
  1. High blood pressure (உயர் குருதியமுக்கம்)
  2. High cholesterol blood level (குருதியில் கொலஸ்ரோலின் அளவு அதிகரித்தல்.)
  3. Diabeties (நீரிழிவு /சலரோகம்)
  4. Kidney diseases that affect kidney function (சிறுநீரக தொழிற்பாட்டை பாதிக்கும் சிறுநீரக வியாதிகள்)
 3. Fixed risk factors —one’s that you cannot alter (மாற்றம் செய்ய முடியாத பாதகமான காரணிகள்)
  1. பரம்பரையில் காணப்படும் நோய்கள்
  2. சலரோகம் Hypertension, Heart Attack போன்றன தாய், தகப்பன் அல்லது மாமா, மாமிக்கு இருப்பின் பிள்ளைகளுக்கு இந்நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். எனவே இவர்கள் குறைந்த வயதில் இருந்தே 30-35 இருந்து தங்கள் குருதியமுக்கத்தை அளத்தல் வேண்டும்.
  3. Being male – (ஆண்களாக இருத்தல்)
  4. An early menopause in woman (குறைந்த வயதில் மாதவிடாய் தடைப்படல்)
  5. Age-வயது அதிகரித்தல்.
  6. Ethnicgroup – ஆசியாவில் பிறந்தவர்கள்.

06. எனக்கு உயர் குருதியமுக்கம் இருப்பின் வேறு என்ன பரிசோதனைகள் தேவை? (Do I need any further test?)

 1. Urine test to check protein or blood in urine (சலத்தில் புரதம் அல்லது சலத்துடன் இரத்தம் வெளியேறுதல்)
 2. A blood test to check that your kidneys are working fine, and to check your cholesterol level and glucose level (சிறுநீரகத்தின் தொழிற்பாடு பற்றிய இரத்தப்பரிசோதனை, இரத்தத்தில் கொழுப்பினளவு, இரத்தத்தில் சீனியின் அளவு)
 3. A heart – tracing called an Eledotro Cardio Gram (ECG- ஈசிஜீ) The purpose of the examination and test is to (பரிசோதனை மற்றும் சோதனை செய்வதற்கான காரணம்)
  1.  Rule out or diagnose a secondary cause of high blood pressure such as kidney disease (உயர். குருதியமுக்கத்திற்கான பின்னணி காரணங்களை நிராகரிப் பதற்கு அவையாவன. – சிறுநீரக நோய்)
   1.  To check to see if the high blood pressure has affected the heart (உயர் குருதியமுக்கம் இதயத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை பரிசோதிப்பதற்கு)
   2.  To check for other risk factors such as a high cholesterol level or diabetic (ஏனைய ஆபத்தை ஏற்படுத்தும் காரணங்களை கண்டறிவதற்கு அவையாவன-சலரோகம் உயர் கொலஸ்ரோல் அளவு)

07) எனது உயர்குருதியமுக்கத்தை எவ்வாறு குறைக்கலாம். (How can blood pressure be lowered?)

இரண்டு முறைகளில் குருதியமுக்கதை குறைக்கலாம்.

a) வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வருதல்

b) மருந்துகள் பாவிப்பதன் மூலம்

வாழ்க்கை முறையில் செயற்படுத்தக் கூடிய முறைகள் பற்றி பார்ப்போம்

 1. உங்கள் நிறையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு வைத்தல் உதாரணமாக உங்கள் உயரம் 160 Cm எனின் அதில் இருந்து 100ஐ கழிப்பதன் மூலம் உங்கள் நிறை 60 kgt 5kg ஆக இருத்தல் நன்று அல்லது BMI 23-25 க்குள் இருத்தல் நன்று
 2. ஒழுங்கான தேகப்பயிற்சி குறைந்தது 30 நிமிடங்கள் கிழமையில் 5 நாட்கள் அல்லது 60 நிமிடங்கள் குறைந்தது 3 நாட்கள் செய்யலாம். உ+ம்- 1. விரைவாக நடத்தல் 2. நீந்துதல் 3. விளையாடுதல் 4.சைக்கிள் ஓடுதல்
 3. Eat a healthy diet (உடலுக்கு உகந்த உணவு வகைகளை உண்ணல்)
  • Atleast five portions of variety of fruit and vegetable per day. ஒருநாளைக்கு குறைந்தது 250gram மரக்கறிகளும் 150 gram பழவகைகளும் ஒருவர் தமது உணவில் சேர்த்தல் நன்று)
  • கோதுமை மா, அரிசி மா, உணவுவகைகளை தவிர்த்து ஆட்டா மா, குரக்கன் மா, கடலைவகைகள், தானிய வகைகள், உழுந்து என்பவற்றில் உணவுகளை தயாரித்து அருந்துதல் நன்று.
  • கொழுப்பு உணவுகளை தவிர்த்தல்.
  •  2-3 portion of fish per week
  •  If you eat meat it is best to eat lean meat
  • நல்லெண்ணெய, சூரியகாந்தி எண்ணெய்களை பாவித்தல் (பொரிப்பதை தவிர்த்து வதக்கி உணவுகளை ஆக்கி உணன்னல்)
  •  உப்பின் அளவை முடிந்தளவு குறைத்தல். Note-(உப்பு அதிகமாக உணவில் சேர்வதால் உயர் குருதி அமுக்கத்தை குறைப்பது கடினம்.)
  • கோப்பி, தேநீர் அருந்துவதை குறைத்தல்.
  • மதுபானம், சிகரட் பாவனைகளை முற்றாக தவிர்த்தல்.
 4.  Treatment with meditation
  மருந்துகள் மூலம் குருதியமுக்கத்தை கட்டுப்படுத்துதல் ஒருவருடைய குருதியமுக்கம் வாழ்க்கை முறைகளில் மாற்றத்தின் பின்னரும் அதிகமாக இருப்பின் (>140/90) மருந்து வகைகள் பாவிக்க வேண்டி வரும் உங்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி மருந்துகளை ஒழுங்காக எடுக்க வேண்டும்.

8. உங்கள் குருதியமுக்கத்தை எவ்வளவுக்கு குறைவாக வைத்தல் வேண்டும்? (What is the target blood pressure to aim for?)

சாதாரணமாக உயர்குருதியமுக்கம் உள்ளவர்கள் தங்கள் குருதியமுக்க அளவை 140/90 குறைவாகவும் சலரோகம் உள்ளவர்கள் 130/85 குறைவாகவும் சீறுநீரக பாதிப்புள்ள வர்கள் 120/80 குறைவாகவும் வைத்திருப்பது நன்று. (வைத் திய ஆலோசனையைப் பெறவும்)

09. எவ்வளவு காலம் மருந்துகள் எடுக்க வேண்டும்? (How long is meditation needed for?) அநேகமாக உங்கள் வாழ்க்கை காலம் முழுவதும் நீங்கள் மருந்துகள், உணவுக்கட்டுப்பாடுகள், அப்பியாசங்கள் செய்தல் வேண்டும். உங்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி நடக்கவும் இவற்றுடன் நாங்கள் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது என்னவென்றால் மன அழுத்தத்தை குறைத்தல் வேண்டும்.

இதற்காக கோயிலுக்கு குடும்பமாக போதல், தியானம் செய்தல், நல்ல பொழுது போக்குகளில் ஈடுபடுதல், மனதை அமை தியாகவும் இறை சிந்தனையுடனும், நல்ல எண்ணங்களுட னும் வாழப்பழகுவோமானால் உயர் குருதியமுக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்து பாதகமான பக்க விளைவுகளில் இருந்து விடுபட்டு நலமாக வாழ முடியும்.

Dr.T.பேரானந்தராசா
பொது வைத்திய நிபுணர்.
யாழ்.போதனா வைத்தியசாலை,