அடிக்கடி தடிமனால் பாதிக்கப்படுகிறேன் தும்மல், மூக்கிலிருந்து நீர் வடிதல் என்பவற்றால் அவஸ்தைப்படுகிறேன். அன்ரிபயோட்டிக் ( Antibiotics) பாவித்தும் குணமடைவதில்லை. இதை எவ்வாறு தடுக்கலாம்?

அடிக்கடி தடிமனால் பாதிக்கப்படுகிறேன் தும்மல், மூக்கிலிருந்து நீர் வடிதல் என்பவற்றால் அவஸ்தைப்படுகிறேன். அன்ரிபயோட்டிக் ( Antibiotics) பாவித்தும் குணமடைவதில்லை. இதை எவ்வாறு தடுக்கலாம்?
இந்த அறிகுறிகளுக்கு ஒவ்வாமையால் சுவாசப்பாதையில் ஏற்படும் அழற்சியே காரணமாகும். இதை ஆங்கிலத்தில் Allergic Rhinitis என்பர். இது கிருமித் தொற்றினால் ஏற்படும் நோய் அல்ல. கிருமித் தொற்றினால் ஏற்படும் நோய்களுக்கே அன்ரிபயோட்டிக் ( Antibiotics) தேவைப்படும். தூசு மற்றும் காற்றில் கலந்துள்ள மகரந்த மணி என்பன சுவாசப் பாதையைத் தூண்டி சில இரசாயனப் பதார்த்தங்களை உற்பத்தி செய்வதால் Allergic Rhinitis ஏற்படுகின்றது. இதனால் அரிப்பு, வீக்கம், மூக்கிலிருந்து நீர் வடிதல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு என்பன ஏற்படுகின்றன. குறித்த ஒரு நபருக்கு சில பொருள்களை ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவற்றைக் கண்டறிந்து தவிர்ப்பதே இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்கும் வழியாகும். சிலருக்கு காலநிலை மாறுபாட்டின் போதும் இவ்வாறு ஏற்படலாம். இதனைத் தவிர்க்க முடியாதவர்கள் மருந்துகளைக் குளிகைகளாகவோ அல்லது நாசியினுள் விசிறியோ (Nasal spray) உள்ளெடுக்கலாம். உதாரணமாக Diphenhydramine, Cetriazine மற்றும் Loratidine என்பனவாகும். இதில் முதலில் கூறியது நித்திரையைக் கூட்டும் என்பதால் பின்னைய இரு மருந்துகளைப் பகல் வேளையில் பாவிக்க முடியும். அவ்வாறு பாவிக்க வேண்டியவர்கள் வைத்திய ஆலோசனையின் பின்னரே எடுக்க வேண்டும்.